Saturday, September 22, 2018

*PF -*


🍅 *வருங்கால வைப்பு நிதி கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?*

🌻ஒரு நிறுவனத்தில் ஊழியர் வேலை பார்க்கும் போது அவர்களுக்குப் பிஎப், மருத்துவக் காப்பீடு, பயணப்படி, பொழுதுபோக்கு படி போன்ற நன்மைகள் அளிப்பார்கள்.

🌻ஆனால் அவர்கள் அளிக்கும் பிஎப் கணக்கில் உள்ள 6 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு பற்றி மட்டும் பலருக்குத் தெரியாது.

🌻1976-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கை நிர்வகித்து வருபவர்களுக்கு EDLI எனப்படும் பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்புறுதி அளிக்கப்படுகிறது.

🌻இதன் மூலம் பிஎப் கணக்கு வைத்துள்ள எல்லா ஊழியர்களும் பயன்பெறமுடியும்.

*எப்படி இந்தக் காப்பீட்டிற்கான பங்களிப்பை அளிப்பது?*

🌻ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு எப்படி ஈபிஎஸ் எனப்படும் பென்ஷன் பங்களிப்புப் பிடித்தம் செய்யப்படுகிறதோ அதே போன்று EDLI-க்கான பிரீமியமும் செலுத்தப்படுகிறது.

*EDLI பிரீமியத்தினை எப்படிச் செலுத்துவது?*

🌻EDLI பிரீமியத்திற்கான தொகை நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உங்களுக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும்

🌻 பிஎப் சந்தார்களின் சம்பளத்தில் இருந்து இதற்காக எந்தக் கூடுதல் தோகையும் பிடித்தம் செய்யப்பட மட்டாது.

*நிறுவனங்கள் உங்களுக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பு எப்படிப் பிரிகிறது?*

🌻பிஎப் கணக்கில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் 12 சதவீதமும் செலுத்தப்படும் என்றும் பொதுவாக நாம் அறிவோம்.

🌻ஆனால் நிறுவனம் நமக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பில் 8.33 சதவீதம் பென்ஷனுக்காகவும், 3.67 சதவீதம் ஈபிஎப் பங்களிப்பு, 0.51 சதவீதம் EDLI பிரீமியம், 0.85% ஈபிஎப் அட்மின் கட்டணங்கள், 0.01% EDLI கட்டணங்களாகச் செல்கிறது.

*EDLI காப்பீடு எப்படிக் கணக்கிட்டு அளிக்கப்படுகிறது?*

🌻EDLI காப்பீடு பிஎப் சந்தாதார் இறந்த பிறகு அவரது 30 மடங்கு அடிப்படை சம்பளம் + அகவிலைப்படியைக் கணக்கிட்டு அளிக்கப்படும்.

🌻அது மட்டும் இல்லாமல் போனஸ் தொகையாக 1,50,000 ரூபாய் அளிக்கப்படும். காப்பீடு பிரீமியம் தொகை அனைவருக்கும் சமமானதே ஆகும்.

*பிஎப் சந்தாதார் இறக்க நேர்ந்தால் EDLI காப்பீடு தொகையைப் பெறுவது எப்படி?*

🌻ஈபிஎப் கணக்குச் சந்தாதரகள் இறக்க நேர்ந்தால் நாமினிக்கள் இந்தக் காப்பீட்டுப் பணத்தினைத் திரும்பப் பெற முடியும்.

🌻ஒருவேலை நாமினி இல்லை என்றால் சட்டப்பூர்வமான குடும்ப உறுப்பினர்கள் காப்பீடு தொகையினைத் திரும்பப்பெறலாம்.
அதற்கு நாமினி அல்லது சட்டப்பூர்வமான குடும்ப உறுப்பினர்கள் படிவம் 5-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

*காப்பீடு தொகையைத் திரும்பப் பெறும் போது கவணிக்க வேண்டியவை?*

🌻EDLI காப்பீட்டினை பெறும் போது பிஎப் சந்தாரர் இறக்கும் வரை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்து இருக்க வேண்டும்.

🌻படிவத்தில் நிறுவனத்தின் அத்தாட்சி இருக்க வேண்டும்.

🌻 நிறுவனத்தில் அத்தாட்சி பெற முடியவில்லை என்றால் கெசட் அலுவலரிடம் பெறலாம்.

*தேவையான ஆவணங்கள்*

1) இறப்புச் சான்றிதழ்

2) நாமிக்கள் மேஜராக இல்லாத போது பாதுகாவலர் நிலை சான்றிதழ் கட்டாயம்.

3) கேன்சல் செய்யப்பட்ட செக்

*உதாரணம்*

🌻பாபுவின் மாத சம்பளம் 15,000 ரூபாய். ஈபிஎப், ஈபிஎஸ், EDLI திட்டங்களில் இவரது பெயரில் பங்களிப்புகள் உள்ளது. பணிக் காலத்தில் இவர் இறந்துவிடுகிறார்.

🌻இவரது நாமினி EDLI காப்பீடு தொகையினைப் பெற முயலும் போது (30 x Rs.15,000) + (Rs.1,50,000) = Rs.6,00,000 அல்லது இதற்கு இணையான ஒரு தொகையினைக் காப்பீடாகப் பெறலாம்

*நிதித்துறை அரசாணைகள்*

1.    G.O.No. 165 Date. 21.05.2012. அரசு ஊழியர்களின் திருமணமாகாத,  விவாகரத்தான, விதவை மகள்களுக்கு குடும்ப ஓய்வுதியம்.

2.    G.O. No.254 to 340. Date. 26.08.2010   One Man Commission Orders.

3.      G.O. NO.444. Date.09.09.2009 OMC அமைக்கப்பட்டது.

4.      Govt Lr.No.36135. Date.19.07.2011.தனிஊதியம் ஆண்டு ஊதிய உயர்வு
மற்றும் பதவி உயர்விற்கும் கணக்கில் கொள்ள ஆணை.

5.     Govt. Lr.8764 Date. 18.04.2012 தனி ஊதியம் பதவி உயர்வின் போது  அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க ஆணை. S.A. பதவி உயர்விற்கு  பின்னர் தொடராது.

6.     G.O.No.23. Date.12.01.2011. ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும்  தனி ஊதியம், மிகை ஊதியம் அனுமதிக்கும் அரசாணை.

7.     G.O.No.258. Date 23.06.2009. 1.1.2006 to 31.05.2009 வரை நியமிக்கப்பட்டபுதிய நியமனதாரர்களுக்கு ஊதிய நியமனம். (1.86 அனுமதித்த  அரசாணை இன்று வரைமுரண்பாடுகள்தொடர்வதற்கு  முக்கியகாரணமே இந்த அரசாணை தான்)

8.     G.O.No. 234. Date. 01.06.2009. திருத்திய ஊதிய விகிதங்கள்,2009.(6-வது ஊதிய குழு அரசாணை.

9.   G.O.No.  71.  Date. 26.02.2011.  OMC - இல் ஊதியம் திருத்தி    அமைக்கப்  பட்டதன்விளைவாகஏற்பட்டமுரண்பாடுகள்திருத்திஅமைத்துஆணை மற்றும் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைப்பு.

10.  G.O.No.116.Date.  09.04.2012   அகவிலைப்படி 1.1.2012.  முதல் 58%  லிருந்து  65% ஆக உயர்வு.

11.    G.O.No.123.    Date.10.04.2012.    ஊதிய  முரண்பாடுகளை நீக்க ஊதிய குறை  தீர்க்கும் பிரிவு அமைப்பு

12.   G.O. No.184. Date. 01.06.2012 Tamil Nadu Govt. Pensioners Family   Securit  Fund Scheme -   மற்றும் financial assistance raised  from Rs.25000/- to 35000/-  in  case of death pensioners - orders

13.  CPS சந்தா மற்றும் நிலுவை தொகை பிடித்தம் செய்யும் முறை பற்றி   நிதித்துறை விளக்க கடிதம். Lr.No.35574/PGC/2011-3 Dated. 23.04.2012.

14.   G.O. No.139. Date.27.04.2012 New Health Insurance Scheme (NHIS) சந்தா   Rs.75/- ஆக ஜூன் 2012 முதல்   பிடித்தம் செய்ய உத்தரவு.

15.  G.O. No. 243 Date.29.06.2012. Medical Aid. N.H.I.S. சந்தா ரூபாய் 150/- ஆக  உயர்வு.. List of eligible hospitals available.

16.  G.O.No. 461. Date.22.09.2009. பொது வருங்கால வைப்பு நிதியின் மாத  சந்தா (12%) வீதம் குறித்த அரசாணை .

17.   Letter No.fin. 57663/pay cell/2009.Dt.30.9.2009. CPS சந்தா 10% பிடித்தம்   செய்திட தெளிவுரை.(Basic Pay + Grade Pay)

18.    G.O.No. 71. Dt.19.03.2003. முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள்  பணி என்பதை விளக்கும் அரசாணை.

19.     G.O. No.304. Dt.27.05.2004. தமிழகத்தில் 1.4.2003 முதல்    CONTRIBUTORY PENSION SCHEME அறிமுகம் - ஆணை.

20.     G.O.No. 201.Dt.21.05.2009.C.P.S. Maintenance of Accounts - Instructions  issued.

21.     G.O. NO.413 Dt.04.11.2010. தனியார் பள்ளிகளில் 1996,97,98 ஆம்  ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட இ .நி .ஆ . களுக்கு பழைய  ஓய்வுதிய திட்டம் தொடர்வது சார்ந்த அரசாணை.

22.     Govt.Lr.63305/Pay Cell/2010-1 Dt.08.11.2010. Fixation of Pay of Employees  in the Selection Gr / Spl Gr- Instructions issued.

23.     Govt.Lr. 63305 _ 4 / Pay Cell / 2010 -4 Dt.12.11.2010. Fixation of Pay in  Selection Gr /Spl Gr - Monetary benefit to be given effect from 1.8.10.

24.     Govt.Lr.63305_5 / Pay Cell / 2010 / Dt. 30.11.10. Fixation of Pay in Selection   Gr / Spl Gr. Instructiuons - Further clarifications issued.

25.    G.O.No.175 Dt.18.06.2010. சம்பளம் ECS முறையில் - ஆணை.

26.    Govt.Lr. 14483/CMPC/2011_1 Date.5.1.2012. Revision of Pay of Certain Categories of Teachers - Fixation of Selection Gr / Spl Gr Instructions.

27.    G.O.No.29.Date.31.01.2013. ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின்  திருமணமாகாத /  விவாகரத்தான / விதவை மகளுக்கு    குறைந்தபட்ச  ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப  ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது -   குறித்த ஆணை.

28.    G.O.No. 173 Dt.01.04.2004. இறப்பு மற்றும் ஒய்வு பணிக்கொடை  கால தாமதமாக வழங்கப்படும் பணிக்கொடைத் தொகைக்கு வட்டி வழங்குதல் - வட்டி விகிதம் - ஆணை.

29.    G.O.420 Dt.11.09.2000. படிகள் - நகர ஈட்டுப்படி - திருநெல்வேலி  நகரத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நகர ஈட்டுப்படி வழங்கிட அனுமதி வழங்கப்பட்ட  ஆணை.

30.     G.O. No. 38. Dt. 11.02.13.ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க  அரசு ஆணை.

31.     G.O.No.75. Date.14.3.2013. முன்பணம்- ஓய்வூதியதாரர்களுக்கு  வழங்கப்படும் பண்டிகை முன்பணம் உயர்த்தி  வழங்குதல்- ஆணை.

32.      G.O.No.61. Date.28.2.2013. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு  சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984-திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை.

33.     G.O.No.62. Date. 28.02.2013. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு  சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை.

34.     Lr.No.34124(Pay Cell) 2009-1, Dated.26.6.2009. G.O.234 Certain  Clarifications. Increment கணக்கிடுவது உள்ளிட்ட
தெளிவுரைகள் உள்ளன.

35.    G.O. Ms.No. 222 Date.01.07.2013. அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மண்டல / மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.

Monday, September 10, 2018

*வரைவுகளில் பிழை தவிர்ப்போம்:*

அரசு அலுவலக வரைவுகளில் நம்மில் சிலர் தமிழ்ச் சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பரவலாகக் காண்கிறோம். அவ்வாறான சில வரைவுகளில் எவை தவறு, எவை சரி என்பன குறித்து நான் அறிந்தவற்றையும், தமிழ் வளர்ச்சித் துறை பயிலரங்கில் தெரிந்துணர்ந்த சிலவற்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

1.செயல்முறை ஆணைகள் வரையும் போது பதவிப் பெயருக்குப் பின்னால் "அவர்களின்" என்கிற வார்த்தை தவிர்க்கப்படவேண்டும்.

உதாரணமாக..
வேலூர் மண்டல இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் என்பது தவறு.

வேலூர் மண்டல இணை இயக்குநரின் செயல்முறைகள் என்பது சரி.

இதற்குப் பின்னர் பிறப்பிப்பவர் திரு. இராஜாராம் என்று எழுதவேண்டும்.

2. இதோடு நாம் அன்றாட அலுவல் வரைவுகளில் தவறாகப் பயன்படுத்தும் சில சொற்களையும்/ வாக்கியங்களையும் அவற்றுள் எது தவறு, எது சரி என்பதையும், இணையான தமிழ்ச் சொற்களையும்  பின்வருமாறு தருகிறேன்.

பார்வை 1 - ல் கண்ட = தவறு
பார்வை 1 - இல் கண்ட = சரி

30 - ம் தேதி என்பது தவறு
30 - ஆம் தேதி என்பது சரி.

கடிதப் பொருள் குறித்து எழுதும் போது அதன் இறுதியில் குறித்து, சார்பாக என்று எழுதுதல் தவறு.

தொடர்பாக என்று எழுதுவதே சரி.

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு = தவறு
ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு = சரி

பயணத்திட்டம் = தவறு
பயண நிரல் = சரி.

அய்யா = தவறு.
ஐயா = சரி.

பட்டியல் = தவறு.
பட்டி = சரி.

அனுப்புனர் = தவறு.
அனுப்புநர் = சரி.

இயக்குனர் = தவறு
இயக்குநர் = சரி.

நகல் = தவறு.
படி = சரி.

கட்டிடம் = தவறு.
கட்டடம் = சரி.

விபரம் = தவறு.
விவரம் = சரி.

ஆவண செய்யுமாறு = தவறு.
ஆவன செய்யுமாறு = சரி.
( சிலர் ஆவணம் செய்யுமாறு என்று கூட எழுதிவிடுகின்றனர்.)

நிர்வாகம் = தவறு.
நிருவாகம் = சரி.

பொருப்பு = தவறு.
பொறுப்பு = சரி.

விடுமுறை விண்ணப்பம் = தவறு.
விடுப்பு விண்ணப்பம் = சரி.

சில்லறைச் செலவினம் = தவறு.
சில்லரைச் செலவினம் = சரி.

ஆரம்பம், துவக்கம் = தவறு.
தொடக்கம் = சரி.

அனுமதி = தவறு.
இசைவு = சரி.

தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதும் அரசுப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மாவட்ட நிலை, சார்நிலை, தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சித் துறையின் சார்நிலை அலுவலகப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று அவர்களுக்கு முறையே முதற்பரிசாக ரூபாய் 3000/-ம், 2ஆம் பரிசாக ரூபாய் 2000/-ம், 3ஆம் பரிசாக ரூபாய் 1000/-ம் வழங்கப்படுகின்றன. இதேபோன்று தெரிவு செய்யப்பெற்ற தலைமைச் செயலகத் துறைகள், துறைத்தலைமை அலுவலகங்கள், அரசுப் பொதுத்துறை நிறுவனத் தலைமை அலுவலகப் பணியாளர்களுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956 இல் இயற்றப்பட்டது.

அரசு ஊழியர்கள் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்று அரசாணை எண். 1134. நாள்: 21.06.1978 இல் ஆணையிடப்பட்டுள்ளது.

வ.மாரிமுத்து
ஆய்வாளர்.

*About Commutation* / தொகுத்து பெறும் ஊதியம் பற்றி

*Commutation*  பற்றி: அஞ்சல் துறை ஊழியர் ஒருவர் ரிட்டையர் ஆகும்போது, அவருக்கு வழக்கமான பணப் பலன்களுடன்,  "கம்யூடேஷன்" என்ற பெயரில்...