*Commutation* பற்றி:
அஞ்சல் துறை ஊழியர் ஒருவர் ரிட்டையர் ஆகும்போது, அவருக்கு
வழக்கமான பணப் பலன்களுடன், "கம்யூடேஷன்" என்ற பெயரில் ஒரு பெரிய தொகையும் வழங்கப் படுகிறது. இது அவரின் விருப்ப அடிப்படையில் வழங்கப்படும் தொகை.
இதை அஞ்சல்துறை, அவருடைய பென்ஷனிலிருந்து மாதா மாதம்
தவணை முறையில் 15 வருடங்கள்
வரை ரெக்கவரி செய்து கொள்ள லாம் என்று ஒப்புதல் வாக்குமூலம் ஒன்று தரவேண்டும், அவ்வளவு தான்.அதன் பேரில் தரப்படும் பெரிய தொகை, இது.
இதற்கு அவர் தன் அடிப்படைப் பென்ஷனில் இருந்து 40 சதவீதத் தொகையை இலாகாவிடம் சரண்டர் செய்ய வேண்டும். இந்த 40 சதவீத ரெக்கவரி, அதற்குண் டான கம்யூட்டே ஷன் ஃபேக்டர் எல்லாமாகச் சேர்ந்து எவ்வளவு வருமோ அந்தத் தொகைதான் இந்தக் "கம்யூடேஷன்". இதை நிர்வாகம் 180 தவணைகளில் பிடித்தம் செய்து கொள்ளலாம்.
இந்தப் புரிதலுடன் பிரச்சனைக்கு வருவோம்.
பிரச்சனை:
மும்பையில் அஞ்சல் துறை பென்ஷனர்கள் 39 பேர், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கு எண் OA. 860 / 2024. விசாரணைக்கு வந்தது.
வாதிகள் தரப்பு வாதம்:
எங்களுக்குத் தரப்பட்ட "கம்யூடேஷன்" தொகைக்கு, மாதா மாதம் தவணை முறையில், பென்ஷனிலிருந்து ஒரு தொகை பிடித்தம் செய்யப் பட்டு வருகிறது. இந்தப் பிடித்தம் எல்லோருக்கும்
15 ஆண்டுகள் வரை நீடிக்கிறது.
ஆனால் சரியாகக் கணக்கிட்டால்,
கொடுத்த தொகை, 12ஆண்டு களில் முழுமையாக பிடித்தம் நிறைவடைந்தபோதிலும், மேலும்
3 ஆண்டுகளுக்குத் ரெக்கவரி தொடர்கிறது. இது நியாயத்துக்கு புறம்பான செயல் மட்டுமல்லாமல், விதிமீறலும் கூட.
இந்தப் பிரச்சனை மீது, ஏற்கனவே, 5வது சம்பளக் கமிஷன் தன் பரிந்து ரையில், எக்காரணம் கொண்டும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரெக்கவரி தொடரக்கூடாது என்று அரசை எச்சரித்திருக்கிறது.
இதற்கு ஒரு உதாரணம், வாதி தரப்பில் தரப்பட்டிருந்தது. அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஒரு போஸ்டல் அஸிஸ்டன்ட்ஓய்வு பெற்றார். அவருடைய பேசிக் பென்ஷன் 40.000 ரூபாய். அதில் 40 சதவீதத்தை கம்யூடேஷனுக் காக, சரண்டர் செய்தார். அதன் பிறகு அவருக்கு,15,73,248/- ரூபாய் மொத்தமாகக் கிடைத்தது. அந்தத் தொகைக்கு, தவணை மூலம் 15 ஆண்டுகளில், அஞ்சல் நிர்வாகம் பிடித்த மொத்தத்தொகை 28.80,000/-. ரூபாய்.
கொடுத்தது.....15,73,248/- ரூபாய்
பிடித்தது.......... 28,80,000/- ரூபாய்
எனவே + 13,06,752/- ரூபாய்,
கூடுதலாகப் பிடிக்கப்பட்டுள்ளது"
இவ்வாறு அதில்கூறப்பட்டிருந்தது.
இறுதித் தீர்ப்பு:
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட
பிறகு CAT வழங்கியதீர்ப்பில் ;.......
"பிடித்தம் நிறுத்துவதற்கு வாதி தரப்பில் கூறப்பட்ட வாதம் நியாயமானது. அமலில் இருந்து வரும் 15 வருஷ ரெக்கவரியை நியாயப்படுத்த எந்த காரணமும்,
பிரதிவாதிகள் தரப்பில் தெரிவிக் கப்பட வில்லை.
மேலும் 5வது மத்திய ஊதியக்குழு,
15 ஆண்டு ரெக்கவரி என்பதை
12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்
திருக்கிறது. இதனடிப்படையில், குஜராத் அரசு மாநில அரசு ஊழியர்களுக்கு, கம்யூடேஷன் ரெக்கவரியை 12 வருடங்களாகக்
குறைத்தது. அதே போல் ஆந்திரப்
பிரதேத்தில், அது13வருஷங்க ளாகக் குறைக்கப்பட்டது.
இந்த அடிப்படையில், ஏற்கனவே மும்பை அஞ்சல் ஊழியர்கள்,
அளித்த மனுக்களை, அஞ்சல் நிர்வாகம் பரிசீலிக்காமல் நிராகரித்தது சரியல்ல.
ஏற்கனவே பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், ரெக்கவரியை 12 ஆண்டுகளாகக் குறைக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரதிவாதி தரப்பில் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்யவில்லை.
மேலும் இந்தப் பிரச்சனையில், மாநில - மத்திய அரசுகளுக்கு இடையே , வித்தியாசமான விதிமுறைகள் எதுவும் இருப்பதாக
கூறப்படவில்லை.
எனவே மனுதாரர்கள் 39 பேரில், 7 பேருக்கான ரெக்கவரியை அஞ்சல்துறை உடனே நிறுத்த
வேண்டும் என்றும்;
மீதமுள்ள 32 பேருக்கு 12 வருடங் கள் வரை மட்டுமே ரெக்கவரி
பண்ணலாம்; அதன் பிறகு அது நிறுத்தப்பட வேண்டும் என்று
உத்திரவிடப்படுகிறது." இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.
நடவடிக்கை:
CAT தீர்ப்பின் அடிப்படையில், அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில்.
"கம்யூடேஷனுக்கான ரெக்கவரி இனி,11 வருஷம், 3 மாதங்களோடு நிறுத்தப்படும்;
அதற்குமேல் கூடுதலாக ரெக்கவரி செய்தவர்களுக்கு, அந்த வகை யில் எக்ஸஸ் ரெக்கவரி செய்த பணத்தை 6% வட்டியுடன் சம்பந்தப் பட்டவர்களுக்குத் திருப்பித்தர வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
GR/15. O1. 2025.
G. Rajamani, Retired, HRO, Madurai
No comments:
Post a Comment