Sunday, March 18, 2018

*மாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual)*

மாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual), என்பது

1.தமிழக அரசுஅலுவலகங்களில் எவ்வாறு அலுவல்களை அன்றாட நடைமுறையில் கையாளுவது என்பதை விளக்கமாக எடுத்துக்கூறும் ஒரு கையேடு ஆகும். வழக்கமாக பொதுமக்களுக்கு இந்நடைமுறை தெரியாததால் அவர்கள் பல இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் ஆளாகின்றனர். இக்கையேடு, தமிழக அரசால் வெளியிடப்பட்ட ஒரு பொது ஆவணம் ஆகும். இக்கையேடு அரசு புத்தகக்கடைகளில் மற்றும் தனியாா் கடைகளிலும் கிடைக்கின்றது. இக்கையேடு அரசு அலுவலகங்களில் யார் என்ன செய்யவேண்டும், யார் எதற்குப் பொறுப்பு என்பதை மிகவும் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

2. அலுவலகத்திற்கு வரும் கடிதங்களை எவ்வாறு கையாளுவது, எவ்வாறு மேல் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதுவது, பெறப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எப்படி எடுப்பது என்பன போன்ற பல உபயோகமான தகவல்களைக் கொடுக்கின்றது. அரசு அலுவலகங்களில் என்ன பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும், யார் செய்ய வேண்டும், என்ன பயனிற்காக செய்ய வேண்டும் போன்ற தகவல்களும் இக்கையேட்டில் உள்ளன. அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்வது, மேல் அதிகாரிகளிடம் எப்படி நடந்து கொள்வது போன்ற தகவல்களும் உள்ளன. இக்கையேடு இரண்டு பாகமாக உள்ளது. முதல் பாகத்தில் மேலே சொன்ன தகவல்களும் இரண்டாவது பாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், வருவாய் கோட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் போன்ற அலுவலகங்களுக்குத் தேவையான சில சிறப்பான தகவல்கள் தரப்பட்டுள்ளன. இதில் உள்ள தகவல்களுக்கு ஆதாரமான அரசாணைகளும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

3. ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் இக்கையேட்டின் நகல் ஒன்று வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் இக்கையேட்டில் உள்ள அறிவுரைகளை ஐயமறத் தெரிந்து கொள்ள வேண்டும், அறிவுரைகள் தெரியாது என்னும் காரணம் எப்பொழுதும் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு அலுவலகத்திற்கு பொறுப்பான அதிகாரி, தம் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் இவைகளை நன்கு தெரிந்து கொள்வதையும், அவ்வப்பொழுது வரும் புதிய அறிவுரைகளையும் இதனுடன் சேர்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

*About Commutation* / தொகுத்து பெறும் ஊதியம் பற்றி

*Commutation*  பற்றி: அஞ்சல் துறை ஊழியர் ஒருவர் ரிட்டையர் ஆகும்போது, அவருக்கு வழக்கமான பணப் பலன்களுடன்,  "கம்யூடேஷன்" என்ற பெயரில்...