Saturday, October 13, 2018

*அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற் கான விதிகள்*

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு: வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக் கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக் கும்போது, இயற்கை சீற்றம், தேசிய தலை வர் மரணம், பந்த், பண்டிகை, திடீர் விடுமு றை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10க்கு மேற் பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்க லாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)

3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலா து.

4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற் கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில் லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).

5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )

6. தகுதிகாண்பருவம் முடித்தவர்- நிரந்தர பணியாளர் ஆண்டு துவக் கத்திலேயே பணி நிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற் செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்தி லேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)

7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.

8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்துவிட்டு பின்னர் இதற்கான விண் ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)

Wednesday, October 10, 2018

*ஓய்வூதியம் மாற்றம்?*

நண்பர்களே,
அருகில் குடும்ப ஓய்வூதியம் பெறும் தாய்மார்கள் இருந்தால் கீழ்கண்டத் தகவலைக் கூறி உதவுங்கள். நன்றி!

தமிழக அரசு 1-10-1979 முதல் 1-7-1996 வரையுள்ள காலத்தில் ஓய்வுப்பெற்றவர் கள் ,  30 ஆண்டுகள் பணிபுரிந்திருந் தாலே முழு ஓய்வூதியம் பெறலாம் என்ப தற்கு  அரசாணை எண் 245/நிதி/நாள் 19-7 - 2018 ல் வெளியிட்டுள்ளது. முன்பு 33 ஆண்டுகளாக இருந்தது.

அனைவருக்கும் நிலுவைத் தொகை கிடைக்கும். பலர் இறந்திருந்தாலும் மனைவிக்கு உண்டு. எடுத்துக்காட்டாக ரூ.1000 ஊதியம் பெற்று 30 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு முன்பு கிடைத்த ஓய்வூதியம் ரூ.1000/2×30/33=ரூ.455. தற்போது புதிய  ஆணைப்படி ரூ 1000/2×30/30= ரூ 500.

எனவே ரூ 1000 ஊதியம் பெற்றவருக்கு ரூ.45 கூடுதலாக கிடைக்கும். ஆண்டுக்கு 12×45= 540  உயரும். ஆணைப்படி 24 ஆண்டுகள் முதல் 42 ஆண்டுகளுக்கு நிலுவைத்தொகைக் கிடைக்கும். சிலருக்கு லட்சக் கணக்கிலும் வரலாம்

எனவே குடும்ப ஓய்வுதியம் பெறும் தாய்மார்கள், தாங்கள் உறுப்பினராக உள்ள ஓய்வூதியர் சங்கத்தை அணுகி  விண்ணப்பம் பூர்த்தி செய்து, கணவர் கடைசியாகப் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ஆபிஸில் கொடுங்கள்.

ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் என அனைவருக்கும் அரசாணைப்படி நிலுவைத்தொகை  கிடைக்கும்.ரூ. 100  அல்லது 200 கொடுத்து சங்கத்தில் சேர கணக்குப் பார்த்தவர்கள் உடன் ஏதாவது ஒரு  சங்கத்தில்  சேர்ந்து பணப்பயனைப் பெற முயற்சியுங்கள்.

தங்கம் செய்யாததை சங்கங்கள் செய்யும் என்பதை மனதில்  கொள்ளுங்கள்!  வாழ்த்துகள்!

*About Commutation* / தொகுத்து பெறும் ஊதியம் பற்றி

*Commutation*  பற்றி: அஞ்சல் துறை ஊழியர் ஒருவர் ரிட்டையர் ஆகும்போது, அவருக்கு வழக்கமான பணப் பலன்களுடன்,  "கம்யூடேஷன்" என்ற பெயரில்...