ஓய்வூதியம் மாற்றம்?
×÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷×
நண்பர்களே,
அருகில் குடும்ப ஓய்வூதியம் பெறும் தாய்மார்கள் இருந்தால் கீழ்கண்டத் தகவலைக் கூறி உதவுங்கள். நன்றி!
தமிழக அரசு 1-10-1979 முதல் 1-7-1996 வரையுள்ள காலத்தில் ஓய்வுப்பெற்றவர் கள் , 30 ஆண்டுகள் பணிபுரிந்திருந் தாலே முழு ஓய்வூதியம் பெறலாம் என்ப தற்கு அரசாணை எண் 245/நிதி/நாள் 19-7 - 2018 ல் வெளியிட்டுள்ளது. முன்பு 33 ஆண்டுகளாக இருந்தது.
அனைவருக்கும் நிலுவைத் தொகை கிடைக்கும். பலர் இறந்திருந்தாலும் மனைவிக்கு உண்டு. எடுத்துக்காட்டாக ரூ.1000 ஊதியம் பெற்று 30 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு முன்பு கிடைத்த ஓய்வூதியம் ரூ.1000/2×30/33=ரூ.455. தற்போது புதிய ஆணைப்படி ரூ 1000/2×30/30= ரூ 500.
எனவே ரூ 1000 ஊதியம் பெற்றவருக்கு ரூ.45 கூடுதலாக கிடைக்கும். ஆண்டுக்கு 12×45= 540 உயரும். ஆணைப்படி 24 ஆண்டுகள் முதல் 42 ஆண்டுகளுக்கு நிலுவைத்தொகைக் கிடைக்கும். சிலருக்கு லட்சக் கணக்கிலும் வரலாம்
எனவே குடும்ப ஓய்வுதியம் பெறும் தாய்மார்கள், தாங்கள் உறுப்பினராக உள்ள ஓய்வூதியர் சங்கத்தை அணுகி விண்ணப்பம் பூர்த்தி செய்து, கணவர் கடைசியாகப் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ஆபிஸில் கொடுங்கள்.
ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் என அனைவருக்கும் அரசாணைப்படி நிலுவைத்தொகை கிடைக்கும்.ரூ. 100 அல்லது 200 கொடுத்து சங்கத்தில் சேர கணக்குப் பார்த்தவர்கள் உடன் ஏதாவது ஒரு சங்கத்தில் சேர்ந்து பணப்பயனைப் பெற முயற்சியுங்கள்.
தங்கம் செய்யாததை சங்கங்கள் செய்யும் என்பதை மனதில் கொள்ளுங்கள்! வாழ்த்துகள்!