Thursday, June 24, 2021

*Govt Staff Legal heirs Post - அரசு பணியாளர் வாரிசுகளுக்குகருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?*

🛡️🔥🛡️🔥🛡️🔥🛡️ *அரசு பணியாளர் வாரிசுகளுக்குகருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?*  

 

இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

2)   கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?    

 ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

3)    கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?  


   தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

4)    இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?     

உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

5)  இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?  

   இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

6)  கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்? 

     இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

7)  கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?    

    கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.
    
1) கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.

 2) இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.

 3) இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.

4) இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.

5) நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.

 6) கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.

 7)வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.

8) இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.

8)  கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற  நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?     

 காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.


9)    கருணை அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?   

  காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து  கணக்கிடப்படுகிறது.

10) காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?     

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும்,  ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.

11)  என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3,  என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார்,  நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன்,   என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?   

 அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,  எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்,  ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர கோறும வயது 18 ஆகும்.

12)   என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன்,  5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை,  எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன்,  நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?    

 தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்,  ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.


13)  கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா?    

 கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03.08.1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும்,  மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

14)   கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,  ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,     தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.


15) திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?  

திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

16)  மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?   

கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

 1) மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).

 2) அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.
    
3) மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.

*மேற்கண்ட நடைமுறைகள் போக்குவரத்து கழகத்திற்கும் பொருந்தும்.* 

நன்றி...

Thursday, June 17, 2021

*அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்*

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை அரசாங்கத்தின் பரிசீலனையின் கீழ் உள்ளது. அதில் எடுக்கப்படும் இறுதி முடிவின் அடிப்படையில் CPS நிதியை PFRDAவுக்கு மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்படும் - நிதித்துறை சிறப்பு செயலாளர் கடிதம்...


அரசு தகவல் மையம் - சிபிஎஸ் செல்-பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- ஏ.ஜி. தணிக்கை-ஆய்வுக் குறிப்புகள் 2018-19 முதல் 2020-2021 வரையிலான ஆண்டுகளுக்கான நிலுவையில் உள்ளவை- தெளிவுபடுத்தல் -  கோரப்பட்டது- பதில் அளித்தல்- தொடர்பாக.

 முதன்மை தரவு செயலாளர் / ஆணையாளர், அரசு தரவு மையம், கடிதம் எண் 3658 / சிபிஎஸ் / 2019, தேதியிட்ட 07.04.2021 மேற்கோள் காட்டப்பட்ட குறிப்புக்கு உங்கள் அன்பான கவனத்தை அழைக்கிறேன். மேலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் (சிபிஎஸ்) கீழ் திரட்டப்பட்ட நிதியை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு (பிஎஃப்ஆர்டிஏ) மாற்றுவது மாநில அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே இறுதி தொகை வழங்கும் நேர்வுகளுக்கு சிபிஎஸ் பங்களிப்புகளுக்கான வட்டி அரசாங்கத்தால் ஏற்கப்படுவது தவிர்க்க முடியாதது. 


2. ஊழியர்களுக்கு தற்போது வரையறுக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட  வல்லுநர் குழுவின் அறிக்கை அரசாங்கத்தால் பெறப்பட்டுள்ளது என்பதையும், இது அரசாங்கத்தின் பரிசீலனையின் கீழ் இருப்பதாகவும், அதில் எடுக்கப்படம் இறுதி முடிவின் அடிப்படையில் சிபிஎஸ் நிதியை பிஎஃப்ஆர்டிஏவுக்கு மாற்றுவது தொடர்பான கூடுதல் நடவடிக்கை அதற்கேற்ப முடிவு செய்யப்படும். நிலுவையில் உள்ள தணிக்கைத் தடைகளைத் தீர்ப்பதற்கு மேற்கண்ட நிலையை ஏ.ஜி.க்கு தெரிவிக்கலாம்.



Sub: Government Data Centre— CPS Cell-Contributory Pension Scheme- A.G. Audit-Inspection notes for the year 2018-19 to 2020-2021- Pending paras- clarification sought for- Reply furnishing- regarding. Ref: From the Principal Secretary/ Commissioner, Government Data Centre, Letter No. 3658/CPS/2019, dated 07.04.2021 

I am to invite your kind attention to the reference cited, and to state that the transfer of fund accumulated under the Contributory Pension Scheme (CPS) to the Pension Fund Regulatory and Development Authority (PFRDA) is based on the policy decision of the State Government and hence it is inevitable that interest on CPS contributions is to be borne by the Government for final settlement cases. 

2. I am also inform that, the report of the Exbert Committee constituted to examine the feasibility of continuing the existing defined benefit pension scheme to employees has been received by Government and the same is under examination of Government and based on the final decision taken thereon further course of action regarding transfer of CPS accumulations to PFRDA will be decided accordingly. The above position may be informed to A.G. for settling the pending audit paras.

Saturday, June 5, 2021

*No pension for govt employees who resign: SC*

*அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் முன்பாக ராஜினாமா செய்தால் பென்ஷன் இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி No pension for govt employees who resign: SC*

ராஜினாமா செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓய்வூதிய சட்டம் அரசுப் பணியில் உள்ள ஊழியர்களுக்கும் பாதுகாப்புத்துறை ஊழியர்கள், சிவில் அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
20 ஆண்டுகள் பணியில் இருந்த பின்னர் ராஜினாமா செய்த அரசு ஊழியர் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து யமுனா பவர் லிமிட்டட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் சந்திரசூட், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விருப்ப ஓய்வும் ராஜினாமாவும் வெவ்வேறு என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
ராஜினாமா செய்துவிட்டு செல்லும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெறும் தகுதி இல்லை என்றும் அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003 டிசம்பருக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
Source:  polimernews

The pension rules apply to government servants, including civilian government servants in the defence services, appointed before December 31, 2003.
• The court passed the order on an appeal filed by BSES Yamuna Power Ltd challenging an order of the Delhi high court directing it to provide pension to an employee who resigned after 20 years of service.
NEW DELHI: Making a distinction between voluntary retirement and resignation, the Supreme Court has said that government employees will not be entitled to pension if they resign from service as it forfeits their past service.
Referring to the Central Civil Services Pension Rules, a bench of Justices D Y Chandrachud and Hrishikesh Roy said that in case of resignation, the entire past service would be forfeited, and consequently, an employee would not qualify for pensionary benefits.
The pension rules apply to government servants, including civilian government servants in the defence services, appointed before December 31, 2003.
The court passed the order on an appeal filed by BSES Yamuna Power Ltd challenging an order of the Delhi high court directing it to provide pension to an employee who resigned after 20 years of service. The HC had said that the employee was entitled to get voluntary retirement after completing 20 years of service and he was, therefore, entitled to pensionary benefits after resigning from the job.
The apex court, however, said taking voluntary retirement and resigning from job are two different things and pension cannot be given in case of resignation. “Where an employee has resigned from service, there arises no question of whether he has in fact voluntarily retired or resigned. The decision to resign is materially distinct from a decision to seek voluntary retirement. The decision to resign results in the legal consequences that flow from a resignation under the applicable provisions. These consequences are distinct from the consequences flowing from voluntary retirement and the two may not be substituted for each other based on the length of an employee’s tenure,” the bench said.
The apex court said though both involve voluntary acts, they operate differently. “One of the basic distinctions is that in case of resignation it can be tendered at any time, but in the case of voluntary retirement, it can only be sought for after rendering the prescribed period of qualifying service. Another fundamental distinction is that in case of the former, normally retiral benefits are denied but in case of the latter, in the same is not denied,” the court said while referring to its earlier verdicts.
Source: timesofindia 
-----------------------

*About Commutation* / தொகுத்து பெறும் ஊதியம் பற்றி

*Commutation*  பற்றி: அஞ்சல் துறை ஊழியர் ஒருவர் ரிட்டையர் ஆகும்போது, அவருக்கு வழக்கமான பணப் பலன்களுடன்,  "கம்யூடேஷன்" என்ற பெயரில்...