" *IFHRMS* "...
இந்த ஓராண்டில் அதிகமாக நாம் பயன்படுத்திய இரண்டு வார்த்தைகள்...
ஒன்று "கொரோனா"
இரண்டு "IFHRMS"....
இரண்டு மூன்று ஆண்டுகளாக இதோ வருகிறது...
அதோ வந்துவிட்டது....
என பரபரப்புக்கு மத்தியில்...
*01/08/2020* இல் வந்தாய் நீ....
ஆரம்பத்தில் நீ எங்களுக்கு "பயன்படுவாய்" என்பதை விட
"பயமுறுத்துவாய்" என்றே இருந்தது....
உன்னுடன் பழக...
பல நாட்கள் இரவு பகல் பாராது...
கணினி முன் அமர்ந்த காலங்கள் உண்டு....
இனி எல்லாம் நீ தான் என்றார்கள்..
ஓடவும் முடியாது
ஒழியவும் முடியாது என சொன்னார்கள்...
சில நேரங்களில் "ஒர்க்கும் ஆகாது" என சொல்லவில்லை🤪
ATBPS / e payroll உடன் நட்புடன் பழகி இருந்த நாங்கள்...
எங்களுக்கு தேவையான நேரத்தில் தேவையான Bills தயார் செய்து Treasury அனுப்பி வந்த நிலையில்...
நீ வரமாட்டாய்...
சாத்தியமில்லை....
எல்லோருக்கும் பயன்படுத்த முடியாது...
என்ற *எதிர்மறை எண்ணங்களை தவிடு பொடியாக்கி* ...
*எங்களிடம் நீ வந்து சேர்ந்து ஓர் ஆண்டு முடிந்து விட்டது* 💐💐💐
தூக்கத்தை தொலைத்த இரவுகளில் உன்னை "திட்டியதும் உண்டு"..
நாங்கள் சொன்னால்
கரூவூல அதிகாரிகள் சொன்னால் கேட்காத நீ
Wipro team சொன்னால் மட்டும் கேட்கிறாய்
என "பொறாமை பட்ட" காலங்களும் உண்டு...
*உன்னுடன் ஏற்கனவே பழகி நட்பாய் இருந்த
பதிவுகள்
இப்போது உனக்கும் எங்களுக்கும் இடையே மிகப் பெரிய *"நட்பு பாலமாக" இருக்கிறது* ....
இந்த மாதமாவது யாருடைய உதவியும் இல்லாமல் நாமே Bills generation செய்ய " பிரசவ வைராக்கியம்" எடுப்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது....
எது எப்படியாயினும்..
சரியான நேரத்தில் "மாத சம்பளத்தை" உன்னால் பெறும் போது...
( *ஒரே நாளில் கூட* )
அடையும் மகிழ்ச்சி...
யாரும் பாராட்டாமல் இருந்தாலும்
எங்களுக்குள் " Olympic medal" பெற்றதாகவே மகிழ்வடைகிறோம்.....
பிரச்சினைகள்
Problem
என "பழங்கதைகள்" பேசி வந்த நாங்கள்
நீ வந்த பிறகு தான்
"Ticket I'd" raise பன்னுங்க
"Resolved"
என நவீன 21 ஆம் நூற்றாண்டின் I.T வார்த்தைகளை கற்றுக் கொண்டோம்.....
Initiator....
Verifier.....
Approver..
என வேறு வேறு I'd இருந்தாலும்...
*எல்லாம் " ஒருவராய்"* இருந்த எங்களை
DSC dongle மூலம்
"Approver" ஐ மட்டும் தனியாக பிரித்து உள்ளாய்....
*அடுத்த கட்ட மாற்றங்களுக்கு* நாங்கள் தயார்👍🏼
மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற நியதிற்கு ஏற்ப....
இந்த *இரண்டாம் ஆண்டில்* அடி எடுத்து வைக்கும் நமது "நட்பு" பெருகட்டும்...💐💐💐
முடியாது
வாய்ப்பேயில்லை...
என்பதை மாற்றி " உங்களால் முடியும்" என்ற தன்னம்பிக்கையை விதைத்தாய் நீ...
தன்னம்பிக்கையுடன்
மகிழ்வித்து மகிழ...🙏🏻🤝🌴🌲🌹🌲🌲🌴