Thursday, January 16, 2025

*About Commutation* / தொகுத்து பெறும் ஊதியம் பற்றி

*Commutation*  பற்றி:

அஞ்சல் துறை ஊழியர் ஒருவர் ரிட்டையர் ஆகும்போது, அவருக்கு
வழக்கமான பணப் பலன்களுடன்,  "கம்யூடேஷன்" என்ற பெயரில் ஒரு பெரிய தொகையும் வழங்கப் படுகிறது. இது அவரின் விருப்ப அடிப்படையில் வழங்கப்படும் தொகை.

இதை அஞ்சல்துறை, அவருடைய பென்ஷனிலிருந்து  மாதா மாதம் 
தவணை முறையில் 15 வருடங்கள்
வரை ரெக்கவரி செய்து கொள்ள லாம் என்று  ஒப்புதல் வாக்குமூலம் ஒன்று தரவேண்டும், அவ்வளவு தான்.அதன் பேரில் தரப்படும் பெரிய தொகை, இது.  

இதற்கு அவர் தன் அடிப்படைப் பென்ஷனில் இருந்து 40 சதவீதத் தொகையை இலாகாவிடம் சரண்டர் செய்ய வேண்டும்.  இந்த 40 சதவீத ரெக்கவரி, அதற்குண் டான கம்யூட்டே ஷன் ஃபேக்டர் எல்லாமாகச் சேர்ந்து எவ்வளவு வருமோ அந்தத் தொகைதான் இந்தக் "கம்யூடேஷன்".  இதை நிர்வாகம் 180 தவணைகளில் பிடித்தம் செய்து கொள்ளலாம்.
இந்தப் புரிதலுடன் பிரச்சனைக்கு வருவோம்.

பிரச்சனை:

மும்பையில் அஞ்சல் துறை பென்ஷனர்கள் 39 பேர், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.  அந்த வழக்கு எண் OA. 860 / 2024. விசாரணைக்கு வந்தது.

வாதிகள் தரப்பு வாதம்:

எங்களுக்குத் தரப்பட்ட "கம்யூடேஷன்"  தொகைக்கு, மாதா மாதம் தவணை முறையில், பென்ஷனிலிருந்து ஒரு தொகை பிடித்தம் செய்யப் பட்டு வருகிறது.  இந்தப் பிடித்தம் எல்லோருக்கும் 
15 ஆண்டுகள் வரை நீடிக்கிறது.  
ஆனால் சரியாகக் கணக்கிட்டால்,
கொடுத்த தொகை, 12ஆண்டு களில் முழுமையாக பிடித்தம் நிறைவடைந்தபோதிலும், மேலும் 
3 ஆண்டுகளுக்குத் ரெக்கவரி தொடர்கிறது.  இது நியாயத்துக்கு புறம்பான செயல் மட்டுமல்லாமல், விதிமீறலும் கூட.

இந்தப் பிரச்சனை மீது, ஏற்கனவே, 5வது சம்பளக் கமிஷன் தன் பரிந்து ரையில்,  எக்காரணம் கொண்டும்  12 ஆண்டுகளுக்குப் பிறகு ரெக்கவரி தொடரக்கூடாது என்று அரசை எச்சரித்திருக்கிறது.

இதற்கு ஒரு உதாரணம், வாதி தரப்பில் தரப்பட்டிருந்தது. அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஒரு போஸ்டல் அஸிஸ்டன்ட்ஓய்வு பெற்றார். அவருடைய பேசிக் பென்ஷன் 40.000 ரூபாய்.  அதில் 40 சதவீதத்தை கம்யூடேஷனுக் காக, சரண்டர் செய்தார்.  அதன் பிறகு அவருக்கு,15,73,248/- ரூபாய் மொத்தமாகக் கிடைத்தது. அந்தத் தொகைக்கு, தவணை மூலம் 15 ஆண்டுகளில், அஞ்சல் நிர்வாகம் பிடித்த மொத்தத்தொகை 28.80,000/-. ரூபாய்.

கொடுத்தது.....15,73,248/-  ரூபாய்
பிடித்தது.......... 28,80,000/-  ரூபாய்
           எனவே + 13,06,752/-  ரூபாய்,
கூடுதலாகப் பிடிக்கப்பட்டுள்ளது"
இவ்வாறு அதில்கூறப்பட்டிருந்தது.

இறுதித் தீர்ப்பு:

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட
பிறகு CAT வழங்கியதீர்ப்பில் ;.......
"பிடித்தம் நிறுத்துவதற்கு வாதி தரப்பில் கூறப்பட்ட வாதம் நியாயமானது.  அமலில் இருந்து வரும்  15 வருஷ ரெக்கவரியை நியாயப்படுத்த எந்த காரணமும்,
பிரதிவாதிகள் தரப்பில் தெரிவிக் கப்பட வில்லை.  

மேலும் 5வது மத்திய ஊதியக்குழு,
15 ஆண்டு ரெக்கவரி என்பதை
12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்
திருக்கிறது. இதனடிப்படையில், குஜராத் அரசு மாநில அரசு ஊழியர்களுக்கு, கம்யூடேஷன் ரெக்கவரியை 12 வருடங்களாகக்
குறைத்தது.  அதே போல் ஆந்திரப்
பிரதேத்தில், அது13வருஷங்க ளாகக் குறைக்கப்பட்டது.
 இந்த அடிப்படையில், ஏற்கனவே மும்பை அஞ்சல் ஊழியர்கள்,
அளித்த மனுக்களை, அஞ்சல் நிர்வாகம் பரிசீலிக்காமல் நிராகரித்தது சரியல்ல.

ஏற்கனவே பஞ்சாப்  மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், ரெக்கவரியை 12 ஆண்டுகளாகக் குறைக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரதிவாதி தரப்பில் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்யவில்லை.
மேலும் இந்தப் பிரச்சனையில், மாநில - மத்திய அரசுகளுக்கு இடையே , வித்தியாசமான விதிமுறைகள் எதுவும் இருப்பதாக 
கூறப்படவில்லை.

எனவே மனுதாரர்கள் 39 பேரில், 7 பேருக்கான ரெக்கவரியை  அஞ்சல்துறை உடனே நிறுத்த
வேண்டும் என்றும்;

மீதமுள்ள 32 பேருக்கு 12 வருடங் கள் வரை மட்டுமே  ரெக்கவரி
பண்ணலாம்;  அதன் பிறகு அது நிறுத்தப்பட வேண்டும் என்று
உத்திரவிடப்படுகிறது." இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

நடவடிக்கை:

CAT தீர்ப்பின் அடிப்படையில், அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதில்.
"கம்யூடேஷனுக்கான ரெக்கவரி இனி,11 வருஷம், 3 மாதங்களோடு நிறுத்தப்படும்;

அதற்குமேல் கூடுதலாக  ரெக்கவரி செய்தவர்களுக்கு, அந்த வகை யில் எக்ஸஸ் ரெக்கவரி செய்த பணத்தை 6% வட்டியுடன் சம்பந்தப் பட்டவர்களுக்குத் திருப்பித்தர வேண்டும்."  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

GR/15. O1. 2025.

G. Rajamani, Retired, HRO, Madurai

Saturday, July 20, 2024

For Whom Get Compassionate Ground Posts / *கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?*

*கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?*     

இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

2     கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?    

 ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

3     கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?  

   தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

4     இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?     

உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

5     இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?  

   இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

6     கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்? 

     இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

7     கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?    

    கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.
    கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.
    இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.
    இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.
    இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.
    நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.
    கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.
    வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.
    இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.

8     கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற  நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?     

 காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.

9     கருணை அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?   

  காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து  கணக்கிடப்படுகிறது.

10     காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?     

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும்,  ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.

11     என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3,  என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார்,  நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன்,   என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?   

  அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,  எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்,  ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.

12     என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன்,  5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை,  எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன்,  நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?    

 தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்,  ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.

13     கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா?    

 கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03.08.1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும்,  மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

14     கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,  ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,     தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.

15     திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?  

   திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

16     மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?   

   கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).
    அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.
    மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.

இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்  யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

*விவிலியராஜா*🙏🏻👍 *வழக்கறிஞர்*
*9442243433*

Saturday, September 23, 2023

அரசு ஊழியர்/ஓய்வூதியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் / State State Government Salary Package(SGSP)

🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺

*எத்தனை பேருக்கு தெரியும்??* 

அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் ,குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு.

👉🏼👉🏼 நாம் அனைவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  (SBI) வங்கியில் சம்பள /பென்சன் கணக்கை சேவிங்க்ஸ் பேங்க் (Savings Account)என்ற முறையிலேயே தொடர்ந்து வருகிறோம். 

ஆனால் அரசு ஊழியர்/ஓய்வூதியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு நமது கணக்கை மாற்ற வேண்டும். அதாவது State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும்.

சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு/பென்சனர்க்கு மட்டுமே உடையது. 

இம்முறையை எந்த வங்கி மேலாளரும் நம்மிடம் கூறுவது இல்லை. 

ஏனெனில் இம்முறையில் பல்வேறு சலுகைகள் அரசு அலுவலர்களுக்கு உண்டு. 

முதலாவதாக எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வித பண இழப்பும் இன்றி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக் கொள்ளலாம்.  எந்தவித சர்வீஸ் சார்ஜும் இதற்கு எடுக்கப் படுவதில்லை. 

ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இல் மட்டுமல்ல எந்த ஏடிஎம்மில் வேண்டுமானாலும் நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். 
அதற்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கப்படுவது இல்லை. 

அடுத்து ஜீரோ பேலன்ஸ் முறை தொடர்ந்து கொள்ளலாம். 

அடுத்ததாக தனிநபர் கடன், வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன் ஆகிய லோன் களுக்கு இம்முறை அக்கவுண்ட் உள்ளவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் 50 சதவீதம் மட்டுமே பிராசஸிங் ஃபீஸ் கொடுக்க வேண்டும்.

SB அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு பெர்சனல் லோன் சர்வீஸ் சார்ஜ் பத்தாயிரம் என்றால், SGSP அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 5000 மட்டுமே. 

அடுத்ததாக பிரீ இன்சுரன்ஸ் 20 லட்சம் வரை இந்த அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு உண்டு. 

இன்னும் பல்வேறு சலுகைகள் இந்த அக்கவுண்டிற்கு உண்டு. 

எனவே அனைத்து ஆசிரியர்களும், அனைத்து அரசு ஊழியர்களும்/ஓய்வூதியர்களும் உங்கள் வங்கிக்கு சென்று உடனடியாக உங்கள் கணக்கை SGSP மாற்றி விடுங்கள். 

இம்முறையில் மாற்றுவதற்கு நாம் வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டியவை:

1. கவரிங் லெட்டர் 
2. பேங்க் புக் ஜெராக்ஸ் 
3. ஆதார் அட்டை நகல் 
4. பான் கார்டு நகல் 
5. ஆன்லைன் பே ஸ்லிப் 

இவற்றை கொண்டு உங்களது அக்கவுண்டை மாற்றிக் கொள்ளுங்கள். 

*இந்த விடுமுறையில் கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் அவசியமான இந்த செயலை செய்து விடுங்கள். தாமதிக்க வேண்டாம்.* நன்றி.வணக்கம்.

From,
--------------------------------------
------------------------------------
---------------------------------
To,
The Manager,
State Bank of india
-------------------- Branch,
------------------------------------.
Sir,
       Sub: Request to treat my SB account No.___. as a pension account to avail the concessions granted to the pensioners-Regarding.

                       I am a tamil nadu Govt servant pensioner and drawing my pension from the above SB account as per the PPO No.C430080/FOR from  onwards from your branch. The above SB account was opened by me purely for drawing my pension from T.N.Govt servant and I request to convert my above SB account as pension SB account instead of common public SB account so as to avail the following concessions permitted to the pensioners by the bank.

a. To maintain zero balance 
b. To draw cash from ATM more than five times in a month
c. To avail the maintenance charge free for my ATM transactions.
d. To avail other concessions granted to the pensioners by the bank.

      Signature of the pensioner        

  Date:

Sunday, September 10, 2023

அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண் என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்/R.c./K.dis./D.Disposal./Letters

அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண் என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.


அதனை நீங்களும் பார்த்திருக்கலாம்.


இந்த எண்கள் மிகவும் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும்.


ஆனால், 

அதன் அருகில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன? என்பது பல பேருக்குத் தெரியாது. 


1. ந.க எண் என்றால், நடப்புக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்


2. ஓ.மு. எண் என்றால், ஓராண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்


3. மூ.மு எண் என்றால்  மூன்றாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்


4. நி.மு. எண் என்றால் நிரந்தர முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்


5. ப.மு. எண் என்றால், பத்தாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்.


6. தொ.மு எண் என்றால், தொகுப்பு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்


7.ப.வெ எண் என்றால்  பருவ வெளியீடு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்


8. நே.மு.க எண் என்றால்,  நேர்முகக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்


மேற்கண்ட வார்த்தைகளில் ந.க.எண்  (நடப்புக் கணக்கு எண்) மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும்.


நேர்முகக் கடிதம் என்பது, 


கீழ்மட்ட அலுவலருக்கு, மேல்மட்ட அதிகாரி எழுதும் கடிதம் ஆகும். இது நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை கீழ்மட்ட அலுவலர் விரைந்து  அளிக்க  வேண்டும்.


மேற்கண்ட எண்கள் இல்லாமல் இருந்தால்…?


மேற்கண்ட குறிப்பு எண்கள் ஏதும் இல்லாமல் அரசு அலுவலகங்களில் இருந்து கடிதம் உங்களுக்கு வந்தால்,  அந்தக் கடிதம் சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் அலுவலகப்பதிவேட்டில் பதியாமல் அரசு அலுவலர்கள் அனுப்பிய கடிதம் என்று நீங்கள் முடிவுசெய்து கொள்ளலாம்.


*கூடுதல் தகவல்கள்* 

நேர்முக கடிதம் என்பது மேல்மட்ட அலுவலர் கீழ்நிலை அலுவலருக்கு எழுதுவது மட்டுமல்ல கீழ்நிலை அலுவலரும் மேல்மட்ட அலுவலருக்கும் எழுதலாம்.

நேர்முக கடிதம் (D.O Letter ie. Demi Official) . இதில் இரண்டு முடிவுகள் விடுபட்டுள்ளது. 

1. அதிமு(அசல் திருப்பு முடிவு N.Dis- Natural Disposal ie. Redirecting original letter to subordinate officers for further reporting 

2.அதிக( அசல் திருப்பு கடிதம் N.Ref- Natural Reference- Mis sent cases - Redirecting original letter to the concerned officer for further action) அதுபோல கோப்பு முடிவிற்கு ஆங்கிலத்தில் 

1. ஓராண்டு முடிவு( L.dis- Lodged Disposal). 

2. மூன்றாண்டு முடிவு( K.dis- Keep Disposal) 

3.  பத்தாண்டு முடிவு( D.dis- Decennium Disposal) 

4. நிரந்தர முடிவு (R.dis.- Retention Disposal).

5.தொகுப்பு முடிவு( F.dis- File Disposal).  

மேலும் ப.மு கோப்பை பத்தாண்டுகள் கழித்து மறு ஆய்வு செய்து கோப்பை அழிக்கலாமா அல்லது நி.மு கோப்பாக மாற்றலாமா என முடிவு செய்ய வேண்டும். அதுபோல நி.மு கோப்பினை முப்பது ஆண்டுகள் கழித்து கோப்பை அழிக்கலாமா அல்லது நிரந்தர முடிவு ஆக தொடரலாமா என முடிவு செய்ய வேண்டும்.

*முக்கிய விதி- கோப்பு முடிவு செய்த வருடத்தை தவிர்த்து ஓ.மு. மூ.மு ப.மு மற்றும் நி.மு  கோப்பின் அழிக்கும் கால அளவினை கணக்கிட வேண்டும்*  

மேலும் கடித வரைவுகளில் குறிப்பாணை / அவசர குறிப்பாணை ( Memo / Urgent Memo), மேலெழுத்து/ மேற்குறிப்பு (Endorsement) மற்றும் அலுவல் சாரா குறிப்பு (U.O. NOTE- Unofficial Note)  உள்ளன.

Wednesday, August 16, 2023

Revalidation of GPF e-authorisation

Respected Officers,
Greetings and Good morning 
    
It is brought to the notice of all TOs/PAOs that, if there is any discrepancies in the GPF e-authorisation, it should be brought to the notice of AG only.

There are clear guidelines already indicated and it should be followed please. 

If there is any change in DDO/Treasury, the GPF e-authorisation should be returned to AG with non payment certificate written on it.
*The GPF e-authorisation has to be scanned and sent to AG through email only.*

*Kindly do not send physical copy / hard copy*.  

Do not send to any other mail IDs or do not mark copy to any other mail ID.

Send only to *egpf.tmn.ae@cag.gov.in* mail ID...

For any query and assistance i am always available over cell 9444440408

Thanking you
Regards
E K Natarajan

Friday, October 28, 2022

*பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை!!*

*பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை!!*


           பழைய ஓய்வூதியத் திட்டம்தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கு நிறைவான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது. அத்திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய புதிய ஓய்வூதியத் திட்டம், ஊழியா்களிடம் ஓய்வூதியத்துக்காக பங்களிப்பைக் கோருகிறது. தவிர ஓய்வூதியமும் சொற்பமாக உள்ளது.

இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டம், 2003 டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, 2004 ஏப்ரல் 1 அன்று தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால், அரசு ஊழியா் ஓய்வூதியத்திற்கு ரூ. 65,000 கோடி செலவிடப்படுவதாகவும், இத்தொகை ஆண்டுதோறும் 20 % உயரும் என்றும் 2003-இல் கூறப்பட்டது. இதனைக் குறைப்பதன் மூலம் வளா்ச்சித் திட்டங்களுக்கு அத்தொகையைப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டது.

முதலில் மத்திய அரசு இத்திட்டத்தை தனது புதிய ஊழியா்களிடம் அறிமுகப்படுத்தியது. பிறகு மாநில அரசுகளும் தொடா்ந்தன. மேற்கு வங்க மாநிலம் மட்டும் இதை ஏற்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடா்ந்தது.

 

இத்திட்டத்துக்கு அரசு ஊழியா்களிடையே இயல்பாகவே எதிா்ப்பு இருந்தது. ஆனால் இப்போது அரசு ஊழியா்கள் போராடும்போது காணப்படும் வேகம் ஆரம்பக்காலத்தில் அவா்களிடம் காணப்படவில்லை. ஏனெனில் புதிய மாற்றம் அறிவிக்கப்படும்போது அதன் விளைவுகள் முழுமையாகத் தெரிவதில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டம் உடனடியாக ஊழியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. குறிப்பாக 2004 ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தவா்கள் ஓய்வு பெறும்போதுதான் இதன் பாதிப்பு முழுமையாகப் புலப்படும்.

 

தற்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியா்கள் போராடி வருகின்றனா். ஏற்கெனவே, ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிவிட்டன. தில்லி, பஞ்சாப் மாநிலங்களும் இதே முடிவை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன. ஆந்திர பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களிலும் அரசு ஊழியா்கள் போராடி வருகின்றனா்.

 

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்டி, ஒவ்வொரு அரசு ஊழியரிடமிருந்தும் மாதந்தோறும் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 % பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளா் ஓய்வூதிய நிதிக்கு அனுப்பப்படுகிறது. அப்போது அரசும் தனது பங்களிப்பாக 14 % (முன்னா் இது 10 %) அளிக்கிறது. இத்தொகை நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு வட்டி ஈட்டப்படுகிறது. அரசு ஊழியா் ஓய்வு பெறும்போது, இந்தத் தொகையை வட்டியுடன் பெறலாம். அல்லது, அவா்கள் வருடாந்திரத் தொகையை நிா்ணயித்துக்கொண்டு குறிப்பிட்ட பெருந்தொகையை வருடந்தோறும் பெறலாம்.

 

அதாவது புதிய ஓய்வூதியதாரா்கள் ஓய்வூதியத்துக்காக தாங்களே ஊதியத்திலிருந்து பங்களிப்புத் தொகையை அளிக்கிறாா்கள். அத்தொகை முதலீடாகும் நிறுவனங்களின் வளா்ச்சியே அத்தொகையின் மதிப்பை நிா்ணயிக்கிறது. ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியா்கள் எந்தப் பங்களிப்பும் அளிக்கத் தேவையில்லை. அதேசமயம், அவா்கள் பணி ஓய்வு பெற்ற மாதத்தில் வாங்கிய ஊதியத்தில் சரிபாதித் தொகையை ஓய்வூதியமாக அரசு வழங்குகிறது. இது அனைவராலும் ஏற்கப்பட்ட திட்டம்.

 

சா்வதேச தொழிலாளா் அமைப்பால் (ஐஎல்ஓ) 1953-இல் நடத்தப்பட்ட 102-ஆவது சமூகப் பாதுகாப்பு மாநாடு, ஓய்வு பெறும் ஊழியா்களது கடைசி மாத காப்புறுதி (இன்ஷ்யூா்டு) ஊதியத்தில் 50 % -ஐ ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதனை அரசு - தொழில் நிறுவனங்கள் - தொழிலாளா்கள் என முத்தரப்பும் இணைந்து நடைமுறைப்படுத்துவதன் மூலமாக சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என்றும் ஐஎல்ஓ கூறியது.

ஐஎல்ஓ-வின் பரிந்துரை, அரசு ஊழியா்களுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தொழிலாளா்களுக்கும் பொருந்தக் கூடியது. ஆயினும் இந்தியாவில் மொத்த வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க இடத்தை அரசு ஊழியா்களே வகிக்கின்றனா்.

 

இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புத் துறையில் முறைசாா் தொழிலாளா்களின் விகிதம் 7 % -க்கும் குறைவு. அதிலும் பொதுத்துறை (அரசு சாா்பு) ஊழியா்கள் 4 % தான் உள்ளனா். 2017 -ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 34.65 லட்சம் மத்திய அரசு ஊழியா்களும், 1.06 கோடி மாநில அரசுகளின் ஊழியா்களும் உள்ளனா். இவா்களில் 2004-க்குப் பிறகு பணியில் சோ்ந்தோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அவா்களை மட்டுமே புதிய ஓய்வூதியத் திட்டம் பாதிக்கும்.

 

ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் புதிய ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அரசு தனது சமூகப் பொறுப்புணா்வைத் தட்டிக் கழிக்க முடியாது. ‘சமமான பணிக்கு சமமான ஊதியம்’ என்ற நிலையை தொழிலாளா்களிடம் நிலைநாட்ட வேண்டிய பொறுப்புள்ள அரசுக்கு, தொழிலாளா்கள் கௌரவமான ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறுவதை உறுதிப்படுத்தும் கடமையும் இருக்கிறது.

 

ஒட்டுமொத்தமாகப் பாா்க்கும்போது மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கவனம் குறைந்துவருவது தெரிகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. நாட்டின் மக்கள்தொகையில் இவா்களின் பங்கு 1951-இல் 5.5 % ஆக இருந்தது, 2011-இல் 8.6 % ஆக உயா்ந்திருக்கிறது.

 

நமது நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 2021-இல் 13.8 கோடி (2011-இல் இது 10.4 கோடி). இது உலக அளவிலான மூத்த குடிமக்களின் எண்ணிக்கையில் 12.5 % ஆகும். இது 2026-இல் 17.3 கோடியாக அதிகரிக்கும் என்று ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பு (யுஎன்பிஎஃப்) மதிப்பிட்டுள்ளது.

 

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (என்எஸ்ஓ) கணிப்புப்படி, 2031-இல் முதியோா்களின் எண்ணிக்கை 19.4 கோடியாக உயரும். அதுமட்டுமல்ல, முதுமை காரணமாக பிறரைச் சாா்ந்திருப்போா் 1961-இல் 10.9 % போ். அது 2011-இல் 14.2 % ஆக உயா்ந்திருக்கிறது. 2031-இல் இது 201 % ஆக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

 

இந்த நிலை, முதியோருக்கு அரசு கவனம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆனால் அரசோ, முதியோா் பாதிக்கப்படும் வகையில் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைத்திருக்கிறது. முறைசாா்ந்த தொழிலாளா்களுக்கே ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காதபோது பிற தொழிலாளா்கள் எவ்வாறு அதனைப் பெற முடியும்?

 

தற்போது வழங்கப்பட்டுவரும் ஓய்வூதியத் திட்டங்களிலேயே முரண்பாடும் ஒழுங்கின்மையும் காணப்படுகின்றன. உதாரணமாக, ஐந்தாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் சட்டப்பேரவை உறுப்பினா் (எம்எல்ஏ) ஒருவா் முழு ஓய்வூதியம் பெறுகிறாா். இதிலும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு உண்டு. மத்திய பிரதேசத்தில் ஒருநாள் பணியாற்றிய எம்எல்ஏவும், ஹரியாணாவில் 7 முறை தோ்வான எம்எல்ஏவும் ரூ. 2.38 லட்சம் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகிறாா்கள்.

தெலங்கானாவில் ஒருமுறை எம்எல்ஏவாக இருந்தவருக்கு ரூ. 50 ஆயிரமும், மூன்று முறைக்கு மேல் எம்எல்ஏவாக இருந்தவருக்கு ரூ. 75 ஆயிரமும் ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றன. எம்எல்ஏ ஓய்வூதியம் ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 30 ஆயிரமாகவும், தமிழகத்தில் ரூ. 40 ஆயிரமாகவும் உள்ளது.

 

இதனை தொழிலாளா் ஈட்டுறுதி நிதி நிறுவனம் (இபிஎஃப்) வழங்கும் தனியாா் நிறுவனத் தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்துடன் ஒப்பிட்டுப் பாா்க்கலாம். லட்சக்கணக்கில் மாத ஊதியம் பெற்ற உயரதிகாரிகள் கூட இத்திட்டத்தில் ரூ. 1,500 மட்டுமே ஓய்வூதியமாகப் பெறுகிறாா்கள்; அண்மையில் ஓய்வு பெற்றவா்கள் கூடுதலாக ஆயிரம் ரூபாய் பெறக் கூடும். இதற்குக் காரணம், அவா்களது ஓய்வூதியப் பங்களிப்புத் தொகையானது ஒட்டுமொத்த ஊதியத்தின்படி கணக்கிடப்படாமல், காப்புறுதி ஊதியத்தின்படி கணக்கிடப்படுவதே.

 

இபிஎஃப் ஓய்வூதியத் திட்டம் அமலான 1995-இல் காப்புறுதி ஊதியம் ரூ. 6,500 ஆக இருந்தது. அண்மையில்தான் இது ரூ. 15,000 ஆக உயா்த்தப்பட்டிருக்கிறது. தற்போதைய ஓய்வூதியக் கணக்கீட்டு சூத்திரத்தின்படி, 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றாலும் அதிகபட்சம் ரூ. 3,250 மட்டுமே ஓய்வூதியமாகப் பெற முடியும்.

 

ஒரு காலத்தில், இத்தொகை ரூ. 500 ஆகக்கூட இருந்ததுண்டு. அதுவரை தொழிலாளா்கள் பெற்றுவந்த ஊதியத்தில் 27 % கூடப் பெற இயலாத நிலையில் 83 % தொழிலாளா்கள் இருப்பதை அறிந்த மத்திய அரசு இத்தொகையை ரூ. 1,000 ஆக்கியது.

ஆதரவற்ற முதியோருக்கான ஓய்வூதியம் கூட இபிஎஃப் ஓய்வூதியத்தைவிட அச்சமயத்தில் அதிகமாக இருந்தது. ஆம், தெலங்கானா மாநில அரசு ஆதரவற்ற முதியோருக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்கிவந்தது. தற்போது ரூ. 2,500 ஆக உயா்த்தப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ரூ. 2,750ஆக இது அதிகரிக்கப்பட உள்ளது. தில்லி, ஹரியாணா மாநிலங்களிலும் முதியோா் ஓய்வூதியமாக ரூ. 2,500 வழங்கப்படுகிறது.

 

மேற்கண்ட விவரங்கள் அனைத்தும், அரசு, தனியாா் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு, அவா்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக அளிப்பதே சரியானாதாக இருக்கும் என்பதையே காட்டுகின்றன. ஆனால் அரசோ, அரசு ஊழியா்களின் ஓய்வூதியத்திலேயே கை வைத்திருக்கிறது.

 

அரசு இதற்கு முன் ஊழியா்களுக்கு அளித்துவந்த ஓய்வூதியப் பயன்களை அதிகரிக்காவிட்டாலும், அவற்றைக் குறைக்காமலேனும் இருக்கலாம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவராமல் அரசு தாமதிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

கட்டுரையாளா்:

பொருளாதார நிபுணர்.
நன்றி தினமணி.

Monday, June 6, 2022

பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் விபத்தில் மரணமடைந்த பட்சத்தில் இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ , மாணவிகளுக்கு ரூபாய். 75,000 கல்வி உதவித்தொகை

குரூப்பில் உள்ளவர்கள் கவனிக்கவும்" மாணவ மாணவியர்களின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் விபத்தில் மரணமடைந்த பட்சத்தில் இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ , மாணவிகளுக்கு ரூபாய். 75,000 கல்வி மற்றும் பராமரிப்பு செலவுக்காக வங்கியில் நிரந்தர இருப்பாக நமது தமிழ் நாடு அரசு வழங்க உள்ளது. 

ஆகையால் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் இல்லாத பட்சத்தில் இருக்கும் மாணவ கண்மணிகள் அவரவர் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றிதழ் பெற்றுக்கொண்டு அவர்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த திட்டத்திற்க்கான அரசாணையை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1Zm25QJSkG8vF90D0J_eEbW3AhCJBkvOB/view?usp=drivesdk

 *தெரிந்தவர்களுக்கு உதவியாக இருப்பின்* மகிழ்ச்சியே..

இப்படிக்கு. 

"தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம்

*About Commutation* / தொகுத்து பெறும் ஊதியம் பற்றி

*Commutation*  பற்றி: அஞ்சல் துறை ஊழியர் ஒருவர் ரிட்டையர் ஆகும்போது, அவருக்கு வழக்கமான பணப் பலன்களுடன்,  "கம்யூடேஷன்" என்ற பெயரில்...