Tuesday, March 27, 2018

*அரசு ஊழியர் வீட்டுக் கடன்...*

 நாணயம் விகடன்Apr,1st 2018    

நடப்பு

அரசு ஊழியர் வீட்டுக் கடன்... விண்ணப்பிக்க இதுவே தருணம்!

அ.முகைதீன் சேக்தாவூது

மீண்டும் ஏறுமுகமாகிவிட்டன வீட்டுக் கடனுக்கான, வங்கிகளின் வட்டி விகிதங்கள். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தரப்படும் இருபது வருட காலத்தில் ஏறுமுகமாகவும் இறங்கு முகமாகவும் நூறுமுகம் காட்டுகின்றன வட்டி விகிதங்கள். ஆனால், ஏறுமுகம் இறங்குமுகம் என்று இல்லாமல், கடன் வாங்கிய தேதியன்று விதிக்கப்பட்ட அதே வட்டி விகிதத்திலேயே கடனைக் கட்டி முடிக்கும் வரை மாறாமல் இருப்பது அரசு வழங்கும் வீட்டுக் கடன் மட்டுமே.  

   கடன் தொகை எவ்வளவு? 

அரசு வழங்கும் இந்த வீட்டுக் கடனைக்கொண்டு  ஆயத்த வீடு (Ready Built House) வாங்கலாம்;  சொந்தமனையில் வீடு கட்டிக்கொள்ளலாம்; புதிதாக மனை வாங்கி, வீட்டைக் கட்டலாம்.  

ஏ, பி, சி, டி ஆகிய நான்கு பிரிவுகளில் அடங்கிய தனது ஊழியர்களுக்குத் தமிழக அரசு தரும் அதிகபட்சக் கடன் ரூ.25 லட்சம் ஆகும். ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட அகில இந்தியப் பணியினருக்கு ரூ.40 லட்சம்  வரை கடன் தரப்படும்.

   என்ன நிபந்தனை? 

முன்பணம் கோரி விண்ணப்பிக்கும் ஊழியரின் பெயரிலோ, அவரது மனைவி/கணவர், பிள்ளைகள் பெயரிலோ, சொந்த வீடு இருக்கக் கூடாது என்கிற நிபந்தனை இந்தக் கடன் பெறுவதற்கு இருந்தாலும், அத்தகைய சொந்த வீடானது கிராமப்பகுதியில் இருக்குமானால், தாம் வசிக்க விரும்பும் நகர்ப்பகுதியில் வீடு ஒன்றைக் கட்டிக்கொள்ள முன்பணம் பெறலாம். 

இதேபோல், தற்போது குடியிருக்கும் சொந்த வீடானது, ஊழியருக்கும், அவரது உடன்பிறந் தோர் உள்ளிட்ட உறவுகளுக்கும் பாத்தியதை யுள்ள பூர்வீக வீடாக இருக்கும்பட்சத்தில்,  தனக்கே தனக்கென ஒரு தனி வீடு கட்ட, கட்டிய வீட்டை வாங்க, மனை வாங்கி வீடு கட்ட முன்பணம் பெற நிபந்தனையானது தளர்த்தப்படலாம்.

   கடனுக்கான வட்டி  

இதைவிட முக்கியமானது, கடனுக்கான வட்டிக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைதான். வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனங்களில் வாங்கிய கடனை, மாத சம தவணை (Equal Monthly Instalment) முறையில் திருப்பிச் செலுத்தும்போது, செலுத்தப்பட்ட தவணைத் தொகையில் அடங்கிய அசல் எவ்வளவு, வட்டி எவ்வளவு என்ற விவரம் தரப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் அசலுக்கும், வட்டிக்கும் உரிய வரிச் சலுகையைப் பெறலாம். 

ஆனால், அரசு வழங்கும் வீட்டுக் கடனைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக 180 தவணைகளில்  (15 ஆண்டுகளில்) அசல் தொகை முதலில் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். அதன் பிறகுதான் வட்டியானது பிடிக்கப்படும். 

‘அப்படியானால், வட்டிக்குத் தரப்படும் வரிச் சலுகையைப் பெற அசல் தொகைப் பிடித்தம் முடிவுக்கு வரும் 15 வருடங்கள்  வரை காத்திருக்க வேண்டுமா? வங்கிக் கடனில் கிடைக்கும் சலுகையைப் போல் அசலுக்கும், வட்டிக்கும் ஒரே சமயத்தில் வரிச் சலுகை பெற முடியாதா?’ என்பது தான் இப்போதைய முக்கியமான கேள்வி!

   வட்டிக்கான வரிச் சலுகை

வங்கி வீட்டுக் கடன் மூலம் பெறும் வட்டிக்கான வரிச் சலுகையைவிட, மேம்பட்ட வரிச் சலுகை அரசு வீட்டுக் கடன் மீதான வட்டிக்கு உண்டு. எப்படி என்று கேட்கிறீர்களா?

எப்படியெனில், வங்கிக் கடனைப் பொறுத்தவரை, செலுத்தப்பட்ட வட்டிக்குத்தான் வரிச் சலுகை பெறப்படுகிறது. தமிழக அரசு வீட்டுக் கடனைப் பொறுத்தவரை, வட்டியைச் செலுத்திய பிறகுதான் வட்டிக்கு வரிச் சலுகை என்பது கிடையாது. அசல் தொகை பிடித்தம் முடிந்த பிறகு செலுத்தப்படப்போகும் திரண்ட வட்டிக்கே (Accrued Interest) வரிச் சலுகை கிடைக்கும். 

ஆனால், அரசு வீட்டுக் கடன் மீது கூட்டுவட்டி கிடையாது. தனிவட்டி கணக்கீடுதான். அதன்படி, ஒவ்வொரு மாத முடிவி லும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட அசல் தொகை போக நிலுவையில் உள்ள அசல் தொகைமீது தனிவட்டியாகக் கணக்கிடப்படும். கடன் தொகை தரப்பட்ட மாதம் தொடங்கி, கடன் தொகை முழுமையாகப் பிடித்தம் செய்து முடிக்கும்வரை மாதாந்திர வட்டி கணக்கீடு தொடர்ந்து நடைபெறும். இந்தக் கணக்கீடு, திரள் வட்டி கணக்கீடு (Accrued Interest Calculation) எனப்படும். இப்படிக் கணக்கிடப் பட்ட வட்டியின் ஒட்டுமொத்தத் தொகைதான் கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டியாகும். இந்த வட்டியானது, அசல் முழுவதும் பிடித்தம் செய்து முடிந்தபிறகே பிடிக்கப்படும்.

ஆனால், வட்டியைப் பிடித்தம் செய்யும்முன்பே வட்டிக்கு உரிய வரிச் சலுகை கிடைத்துவிடும். எப்படி? மாதந்தோறும் திரண்ட வட்டி கணக்கிடப்படுகிறது அல்லவா? அவ்வாறு திரளும் வட்டியின் கூட்டுத்தொகை ஒரு நிதியாண்டுக்கு எவ்வளவோ, அந்தத் தொகை அந்தந்த நிதி யாண்டில் வட்டிக்கான வரிச் சலுகையாக கிடைக்கும். உதாரணமாக, ஓர் ஊழியர் சென்ற நிதியாண்டில் பெற்ற வீட்டுக் கடன் முன்பணம் ரூ.25 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். தவணை செலுத்தும் மாதங்கள் 100. மாதத் தவணைத்தொகை ரூ. 25,000. சென்ற நிதியாண்டிலேயே ரூ.2  லட்சம் அசல் தொகை பிடித்தம் செய்யப்பட்டுவிட்டது.

   வட்டி எவ்வளவு? 

இந்த நிதியாண்டின் துவக்கத்தில் அசல் தொகை ரூ.23 லட்சமாக இருக்கும். முதல் மாதம் பிடித்தம் செய்தபின் ரூ.22,75,000-ஆகவும், இரண்டாவது மாதம் பிடித்தம் செய்ததும் ரூ.22,50,000- ஆகவும் அசல் தொகை குறைய ஆரம்பிக்கும். இதற்கான வட்டியைக் கணக்கிட்டால், நடப்பு நிதியாண்டுக்குத் திரண்ட வட்டி ரூ.2,04,500-ஆக இருக்கும். இதில் ரூ.2 லட்சம் வரிச்சலுகை பெறும் கடந்த நிதியாண்டின் வட்டி விகிதம் பின்வருமாறு:

ரூ.50,000 வரை - 5.5%
ரூ.50,000 முதல் 1,50,000 - 7.0%
ரூ.1,50,000 முதல் 5,00,000 - 9.0%
ரூ.5,00,000-க்குமேல் - 10.0%

அசல் தொகை முழுவதும் பிடித்து முடிக்கும் வரை மேற்கண்ட வட்டி விகிதம் மாறவே மாறாது. இதன்படி, ஒருவரின் கடன் நிலுவைமீது அடுத்த (2018-2019) நிதியாண்டுக்குத் திரளும் வட்டி ரூ.1,74,500-ஆக இருக்கும். இந்தத் தொகையும் வரிச் சலுகை பெறும். ஆக, அரசு வீட்டுக் கடனைப் பொறுத்தவரை, வட்டியைக் கட்டும் வரை காத்திராமல், திரண்ட வட்டியைக் கணக்கிட்டு, அதற்குரிய வட்டிக்கு வரிச் சலுகை பெறலாம். 

   எப்போது விண்ணப்பிக்கலாம்?

இந்தக் கடனுக்கு இப்போதே விண்ணப்பிப்பது நல்லது. அப்படி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள்   முன்னுரிமை பெறும். மூன்று, நான்கு மாதங்களுக்குள் கடன் தொகையைப் பெற்றுவிட வாய்ப்புண்டு. 

   தேவையான ஆவணங்கள் 

* தற்போதைய சம்பளச் சான்று, * வீட்டுமனை பத்திரம், * தற்போதைய வில்லங்கச் சான்று, * நில வரைபடம் (Site plan), * வீட்டு வரைபடம், * மதிப்பீடு (Estimate), * வீட்டுமனையில் விண்ணப்ப தாரரின் பாத்தியதை குறித்து அரசு வழக்குரைஞரின் கருத்து (opinion of govt. pleader), * வீடு கட்ட உள்ளாட்சியின் அனுமதி, * மனையானது, ஊழியரின் பெயரில் இல்லாமல் அவரது மனைவி / கணவர் பெயரில் இருந்தால், அவரது எழுத்துபூர்வமான இசைவு ஆகிய அனைத்தும்  இரட்டைப் பிரதிகளில், வீட்டுமனை எங்கு உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் குறைபாடுகள், விடுபாடுகள் இருந்தாலும் விண்ணப்பமானது முன்னுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். விடுபாடுகள் 15 தினங்களுக்குள் சரி செய்யப்படவேண்டும்.

   முன்பணம் விடுவித்தல்

* ஆயத்த வீடு வாங்கினால் ஒரே தவணையில் ஒட்டு மொத்த முன்பணமும் (கடன்) தரப்பட்டுவிடும். * சொந்தமான மனையில் வீடு கட்ட இரண்டு தவணைகளில் தரப்படும். * மனை வாங்கி அதில் வீடு கட்டவும், தனியார் கட்டித் தரும் வீடு / அடுக்குமாடி வீட்டை வாங்குவதற்கும் மூன்று தவணைகளில் முன் பணம் தரப்படும். 

   கடன் பணத்தைத் திரும்பக் கட்டுவது

* ஆயத்த வீடு வாங்க தரப்பட்ட முன்பணத்துக்கு, பணம் வழங்கப்பட்ட அடுத்த மாதமே அசல் தவணைப் பிடித்தம் தொடங்கிவிடும். * வீடு கட்ட முன்பணம் பெறுவோர்க்கு முதல் தவணை பெற்ற நாளிலிருந்து 18-வது மாதம் அல்லது கட்டிய புது வீட்டில் குடியேறிய மாதத்துக்கு அடுத்த மாதம் முதல். இதில் எது முன்போ, அப்போதிருந்து தவணைப் பிடித்தம் தொடங்கும்.

புதிதாக வீட்டுக் கடன் வாங்க நினைக்கும் அரசு ஊழியர்கள் இந்தக் கடனைப் பரிசீலிக்கலாமே!

வட்டி விகிதக் கணக்கு!

அரசு வழங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் ஏறும், இறங்கும். ஆனால், கடன் பெற்ற நிதியாண்டில் அரசு நிர்ணயித்த வட்டி விகிதமே கடைசிவரை நீடிக்கும்.  கட்டுரையில் நாம் உதாரணமாகத் தந்த திரள் வட்டி கணக்கீடு, சென்ற நிதியாண்டில் கடன் பெற்ற ஊழியருக் கானது. நடப்பு நிதியாண்டில் வட்டி விகிதம் மேலும் 0.5%  குறைக்கப்பட்டுள்ளது. அரை சதவிகிதம் வட்டி குறைந்ததால் பெரிதாக என்ன மாற்றம் இருக்கப்போகிறது என்று நினைக்கத் தோன்றுகிறதா? நடப்பு நிதியாண்டில் கடன் பெற்ற ஓர் ஊழியருக்குக் குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வட்டி கணக்கிட்டால், நடப்பு நிதியாண்டுக்கு மட்டுமே ரூ.10,812 வட்டி குறையும். இது ஒன்றும் சாதாரண தொகை இல்லையே!

*நடத்தை விதிகள்*

*✳தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன் குறிப்புகள்*

*நடத்தை விதிகள் என்றால் என்ன*?
அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ளநடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
சொத்து வாங்குதல், விற்றல், நிதி ஆதாரங்கள் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசுக்கு முறைப்படி தெரிவித்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை பணிபுரிபவர்கள் கடைபிடிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1976 உருவாக்கப்பட்டது.

✳இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) &  (6) ன் கீழ்க்கண்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.

✳தந்தை / வளர்ப்பு தந்தை

தாய் / வளர்ப்பு தாய்

கணவன்

மனைவி

மகன் / வளர்ப்பு மகன்

மகள் / வளர்ப்பு மகள்

சகோதரன்

சகோதரி

மனைவியின் தாய் மற்றும் தந்தை

கணவரின் தாய் மற்றும் தந்தை

சகோதரனின் மனைவி

சகோதரியின் கணவர்

மகளின் கணவர்

மகனின் மனைவி

இந்த உறவுமுறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுவர்.

✳உயர்கல்வி பெறுவது தொடர்பான அரசாணை :

தொலைதூரக் கல்வி, மாலைநேரக் கல்லூரி மற்றும் தனியாக படிக்க அரசு ஊழியர், தன் துறை தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அந்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு ஊழியர் கருதிக் கொள்ளலாம்.

✳அரசாணை எண்  Ms. No - 200, P & A. R, dt - 19.401996 ன்படி அரசுப் பணியை தவிர எந்த பணியையும் அரசு ஊழியர் ஏற்கக்கூடாது.

அரசு ஊழியர் எவரும் பகுதி நேர வேலை எதையும் செய்யக்கூடாது. ( G. O. Ms - 893,P &  A. R, dt - 22.9.1983 மற்றும்  Rule 8(1)(aa)).ஆனால் Provision 6 under Rule 8(1)(a) ல் கண்டுள்ள விலக்களிப்பின்படி அரசு ஊழியர் ஒருவர் கல்வி நிலையங்களில் விரிவுரையாற்றி அதற்கென மதிப்பூதியம் பெறலாம்.

✳*தனியாக வகுப்பு நடத்துதல்*

எந்த ஆசிரியரும் தனிவகுப்பு(Tution) நடத்தக்கூடாது. Tution  நடத்தும் எண்ணத்துடன் மாணவரிடமோ, அவருடைய பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இருப்பினும் பணம் எதுவும் பெறாமல் மாணவர்களுக்கு Tution எடுக்க தடை ஏதும் இல்லை. (Rule 6(17)).

✳விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்பு :

அலுவலக வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒருவர் விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்கலாம். ஆனால் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அலுவலகத் தலைவர் அறிவுறுத்தினால் அதுபோன்ற
வேலைகளில் ஈடுபடக்கூடாது. (Provision 1 under rule 8(1)(a)).

🌻அசையாச் சொத்து தொடர்பான விதிகள் :

அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் சொந்த வருவாயிலிருந்து ஒரு சொத்தை கையகப்படுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ எவருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால் அரசு ஊழியரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஒரு சொத்தை கிரையமாக பெற்றால் அதற்கு துறைத் தலைவரின் அனுமதியை பெற வேண்டும். ( G. O. Ms - 3158, Public (service - A) Dept, dt - 27.9.1974).

🌻அரசு வேலையில் இருக்கின்ற கணவன், மனைவி இரு சேர்ந்து ஒரு சொத்தை கிரையம் வாங்கினால் அதன் விவரத்தை துறைத் தலைவருக்கு இருவரும் தனித்தனியாக தெரிவிக்க வேண்டும். ( Govt. Lr. No. 29546/80-4 P & A. R, dt - 22.10.1980).

🌻மூதாதையர் சொத்து ஒன்று வாரிசுரிமையின் படி இறங்குரிமையின் மூலம் கிடைக்கும் தருவாயில் அந்த நிகழ்வை துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டாம். சொத்து அறிக்கையில் மட்டும் காட்ட வேண்டும். (Rule 7(3).

அரசு ஊழியர் பணிபுரியும் மாவட்டத்தில் எந்த சொத்தையும் கையகப்படுத்தக்கூடாது. முன்னர் பணிபுரிந்த மாவட்டமாக இருந்தால் இடம் மாறுதல் பெற்று 2 ஆண்டுகள் கடந்த பின்னர் தான் சொத்து ஒன்றினை கையகப்படுத்த வேண்டும் . ( Rule 7(14).

இருப்பினும் வீடு அல்லது வீட்டுமனை ஒன்றினை பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மாவட்டத்தில் வாங்கவே அல்லது விற்கவோ தடையில்லை. (Provision under rule 7(14)(a).

*வருவாய்த்துறை அல்லது நிதித்துறையில் பணிபுரிபவர்கள் அத்துறையில் நடத்தப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையகப்படுத்தக்கூடாது. (Rule 7(16).*

Record Sheet அல்லது Personal File - ஐ பராமரித்து வரும் அதிகாரி ஊழியர்களின் சொத்து விவரங்களையும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். ( Rule 7(9).

கீழே குறிப்பிட்டுள்ள தொகைக்கும் அதிகமாக சொத்து வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த Rule 7(2) as amended in G. O. Ms. No - 39, P & A. R. dt - 9.3.2010.

A Group Employees may Purchase upto Rs. 80,000/-

B Group Employees may Purchase upto Rs. 60,000/-

C Group Employees may Purchase upto Rs. 40,000/-

D Group Employees may Purchase upto Rs. 20,000/-

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை, 5 ஆண்டுகள் முடிவில் சொத்து அறிக்கை ஒன்றை துறைத் தலைவரிடம் தாக்கல் செய்ய வேண்டும். ( Rule 7(3).

*அரசு ஊழியரின் அரசியல் செல்வாக்கு :*

அரசு ஊழியர்கள் பொதுவாக அரசியல் செல்வாக்கு கொண்டு வருதல் அல்லது அமைச்சர்களிடம் முறையிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர் எவரேனும் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அவரை அலுவலகத் தலைவர் கூப்பிட்டு தவறு என்று அறிவுறுத்த வேண்டும். அந்த அறிவுரையை பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக ஒரு அரசு ஊழியர் திரும்பவும் அரசியல் செல்வாக்கை கொண்டு வந்தால் அவரை துறைத் தலைவர் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதற்கு பின்னரும் அரசு ஊழியர் தொடர அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அந்த அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (Govt. Letter No  9637/A/95-1,P & A. R. (A) Dept, dt - 24.4.1995).

*அலுவலக பிரச்சினை தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்யலாம். பின்னர் அந்த முறையீடு விவரத்தை அலுவலகத் தலைவர் வழியாக துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். (G. O. Ms. No - 9, P & A. R (A) Dept, dt - 2.10.1985).*

♻♻♻♻♻♻♻♻

Sunday, March 18, 2018

*மாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual)*

மாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual), என்பது

1.தமிழக அரசுஅலுவலகங்களில் எவ்வாறு அலுவல்களை அன்றாட நடைமுறையில் கையாளுவது என்பதை விளக்கமாக எடுத்துக்கூறும் ஒரு கையேடு ஆகும். வழக்கமாக பொதுமக்களுக்கு இந்நடைமுறை தெரியாததால் அவர்கள் பல இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் ஆளாகின்றனர். இக்கையேடு, தமிழக அரசால் வெளியிடப்பட்ட ஒரு பொது ஆவணம் ஆகும். இக்கையேடு அரசு புத்தகக்கடைகளில் மற்றும் தனியாா் கடைகளிலும் கிடைக்கின்றது. இக்கையேடு அரசு அலுவலகங்களில் யார் என்ன செய்யவேண்டும், யார் எதற்குப் பொறுப்பு என்பதை மிகவும் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

2. அலுவலகத்திற்கு வரும் கடிதங்களை எவ்வாறு கையாளுவது, எவ்வாறு மேல் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதுவது, பெறப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எப்படி எடுப்பது என்பன போன்ற பல உபயோகமான தகவல்களைக் கொடுக்கின்றது. அரசு அலுவலகங்களில் என்ன பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும், யார் செய்ய வேண்டும், என்ன பயனிற்காக செய்ய வேண்டும் போன்ற தகவல்களும் இக்கையேட்டில் உள்ளன. அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்வது, மேல் அதிகாரிகளிடம் எப்படி நடந்து கொள்வது போன்ற தகவல்களும் உள்ளன. இக்கையேடு இரண்டு பாகமாக உள்ளது. முதல் பாகத்தில் மேலே சொன்ன தகவல்களும் இரண்டாவது பாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், வருவாய் கோட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் போன்ற அலுவலகங்களுக்குத் தேவையான சில சிறப்பான தகவல்கள் தரப்பட்டுள்ளன. இதில் உள்ள தகவல்களுக்கு ஆதாரமான அரசாணைகளும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

3. ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் இக்கையேட்டின் நகல் ஒன்று வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் இக்கையேட்டில் உள்ள அறிவுரைகளை ஐயமறத் தெரிந்து கொள்ள வேண்டும், அறிவுரைகள் தெரியாது என்னும் காரணம் எப்பொழுதும் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு அலுவலகத்திற்கு பொறுப்பான அதிகாரி, தம் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் இவைகளை நன்கு தெரிந்து கொள்வதையும், அவ்வப்பொழுது வரும் புதிய அறிவுரைகளையும் இதனுடன் சேர்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Time

அனைத்து அரசு ஊழியர்களும் வாரநாட்களில் காலை 9.45 முதல் மாலை 5.45 மணிவரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். அலுவலகப் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் முன் மாதிரியாக காலதாமதம் செய்யாமல் அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும். மதிய இடைவேளைக்கு மதியம் 1 மணி முதல் 2 மணி வரை ஒருவர் பின் ஒருவராகச் சென்று 1/2 மணிக்குள் திரும்பிவிட வேண்டும். அனைவரும் ஒன்றாகச் செல்லுதல் கூடாது.

@வருகைப்பதிவேடு

குறிப்பிட்ட கட்டங்களுடன் ஒரு வருகைப்பதிவேடு பராமரிக்கப் படவேண்டும். இது அலுவலகப் பொறுப்பில் உள்ள அதிகாரி வசம் இருக்க வேண்டும், ஒரு தாமத வருகைப்பதிவேடும் பராமரிக்கப் படவேண்டும். அலுவலகக் கோப்புக்களை எக்காரணம் கொண்டும் அலுவலகத்தை விட்டு வெளியே வீட்டிற்கு எடுத்துச் சென்று பணி செய்யலாம் என்று எண்ணக்கூடாது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளிலும், விடுமுறைகளிலும் வேலை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. விடுமுறைகளில் அவசர வேலை வந்தால், அதனைச்செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

#சிறுவிடுப்பு#

சிறுவிடுப்பு அப்பொழுது நடைமுறையில் இருக்கும் விதிகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.சிறுவிடுப்பிற்கான காரணம் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தெளிவில்லாத “அவசர சொந்தக்காரணங்களுக்காக” என்றோ, “விழா அல்லது சடங்குகளில் பங்கேற்க” என்று பொதுவான காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விடுமுறையை எடுப்பதற்கு முன்பே மனுவை அளித்து ஒப்புதல் பெற்றுவிட வேண்டும். வருகைப்பதிவேடு குறிப்பிட்ட முறையில் பராமரிக்கப் படவேண்டும். ஒவ்வொரு அலுவலக ஊழியர்களுக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு அவருடைய விடுமுறை கணக்கு பராமரிக்கப் படவேண்டும். மாற்று விடுமுறை (Compensatory Leave, optional religion holiday) பண்டிகைக் கால சிறப்பு விடுமுறை குறித்த தகவல்களும் பதியப்பட வேண்டும்.

*PAN - TDS-24Q*

அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் கவனமாக படிக்கவும்.
Be alert all govt staffs ,

நமது ஆதார் எண், வங்கி கணக்கு எண், PAN நம்பர் ஆகியவை நமது ECS WEB
PAYROLL ( ONLINE SERVICE RECORD-S.R.) மூலம் இணைக்கப்பட்டுள்ளது. நாம்
வாங்கும் சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் அந்த
சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமானவரி நமது பான் கார்டில் கட்டாயம் வரவு
வைக்கப்பட வேண்டும். நம்மிடம் சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமான வரி
நமது அலுவலக TAN நம்பரில் சேர்ந்து இருக்கும்.  நமது அலுவலக DDO (TAN)
நம்பரில் இருக்கும் வருமான வரி பிடித்தத்தை PAN நம்பருக்கு மாற்ற
கட்டாயம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q ஒவ்வொரு காலண்டுக்கும்
தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு முடிவில் Form-16 நாம் பெறவேண்டும். இதை
வலியுறுத்தி நமது தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசாணை (G.O.880
DT:12.12.2014, G.O.843 DT; 15.12.2015) வெளியிட்டுள்ளது. இதுவரை நாம்
Form-16 வாங்கவில்லை எனில் நம்மிடம் பிடிக்கப்பட்ட வருமான வரி நமது
பெயரில் வரவு வைக்கப்படாமல் உள்ளது. அதாவது நாம் இதுவரை வருமான வரி
காட்டவில்லை என்று பொருள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q  தாக்கல்
செய்யாமல் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 200 அபராதம்
விதிக்கப்படும். இது சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பொருந்தும் Please forward to all

*ஊழியா்களின் கனிவு*

அலுவலகத்தில் பணிபுரியும் போது ஊழியா்கள் அமைதியாகவும் பெருந்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். சக ஊழியர்களிடம் கனிவாகப் பேசவேண்டும். கவனச் சிதைவில்லாமல் காலத்தை வீணடிக்காமல் பணியில் ஈடுபட வேண்டும். அலுவலகத்தில் அமைதிகாத்து, சக ஊழியர்களிடம் கலந்து பேச வேண்டிய நிர்பந்தம் வந்தால், அமைதியாக மற்றவர்களுக்கு இடையூறு நேரவண்ணம் தாழ்ந்த குரலில் பேச வேண்டும். அலுவலகத்தகவல்களை எக்காரணம் கொண்டும் மற்றவர்களிடமும் தொடர்பில்லாதவர்களிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அலுவலகத்திற்கு வரும் மனுதாரர்களிடமிருந்தோ அல்லது பொது மக்களிடமிருந்தோ எக்காரணத்தைக் கொண்டும் எவ்விதமான அன்பளிப்பும் பெறக்கூடாது. அவர்களிடம் உதவியைப்பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்றிக்கடன் அல்லது கடப்பாடு உடையவர்கள் என்ற நிலைக்கு உள்ளாகக்கூடாது. அலுவலகத்தில் குப்பைக்கூடை வைத்து அனைத்துக்குப்பைகளையும் அதில் தான் சேகரிக்க வேண்டும். எழுது பொருள்கள், கோப்புகள் அங்கிமிங்குமாக சிதரிக்கிடக்காமல் ஒழுங்காக நிலைப்பேழையில் அடுக்கி வைக்கப்பட வேண்டும்

*About Commutation* / தொகுத்து பெறும் ஊதியம் பற்றி

*Commutation*  பற்றி: அஞ்சல் துறை ஊழியர் ஒருவர் ரிட்டையர் ஆகும்போது, அவருக்கு வழக்கமான பணப் பலன்களுடன்,  "கம்யூடேஷன்" என்ற பெயரில்...