Sunday, October 10, 2021

Supplementary - Regular Salary

நண்பர்களே நீண்ட பதிவு.... supplementary regular salary எவ்வாறு தயார் செய்வது யாருக்கு தயார் செய்வது??

புதிதாக ஒரு பணியாளர் பணியில் சேரும் பொழுது முதலில் அவருக்கு cps number பெற்றுவிட்டு பட்டியல் தயார் செய்யும் போது அந்த மாதம் முடிவடைந்து இருக்கும். பணியாளர் சரியாக 1ஆம் தேதியில் பணி ஏற்று இருக்க மாட்டார்.

இவர்களுக்கு புதிதாக id create செய்துவிட்டு, எந்த நாளில் பணி ஏற்றாரா அந்த நாளில் bill group இல் add செய்துவிட்டு dues and deductions பதிவேற்றம் செய்து விட்டு regular supplementary salary கொடுக்கப்படும் பொழுது பட்டியல் சரியாக வரும்.

யாராவது ஒரு பணியாளர் மகப்பேறு விடுப்பில் செல்லும் பொழுது அவருக்கு leave sanction செய்வதற்கு மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகிறது எனில், அல்லது வேறு சில காரணங்களுக்காக மூன்று அல்லது நான்கு மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் வரையிலும் ஒருவருக்கு சம்பளம் பெற்று தராமல் இருக்கின்றோம் எனில் முதலில் அவர்களுக்கு மாதாமாதம் payroll run ஆகி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

Payroll run ஆகி உள்ளது எவ்வாறு தெரிந்து கொள்வது? Result இல் அவர்கள் பெயர் இருந்தால் payroll run ஆகி உள்ளது என்று அர்த்தம்.

இங்கு *யாருக்கு நாம் பட்டியல் தயார் செய்யவில்லையோ அவர்களை தனியாக ஒரு bill group இல் வைப்பது தவறான முறை*

அவர்களுக்கு payroll run ஆகி இருந்தால் remove from current pay roll என்று கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதை கடைசி மாதத்தில் இருந்து கொடுக்கப்படவேண்டும். எவ்வாறு எனில் *செப்டம்பர் ஆகஸ்ட் ஜூலை ஜூன் மே என்று reverse ஆக remove from current pay roll கொடுக்கப்பட வேண்டும்.* 

இவ்வாறு கொடுத்துவிட்டு supplementary regular salary தயார் செய்யும்பொழுது எந்த மாதத்தில் இருந்து தயார் செய்யவில்லையோ உதாரணமாக மேலே சொன்ன மாதத்தை எடுத்துக் கொண்டாள் *மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் என ஒவ்வொரு மாதமாக regular supplementary salary process செய்யப்பட வேண்டும்.* 
**

 *இதில் மாதத்தை மாற்றி process செய்தோம் எனில் result இல் Zero என்றுதான் வரும்.* 
பணியாளர் ஒருவர் 25 ஆம் தேதி பட்டியல் தயார் செய்த பிறகு மாறுதல் பெறுகிறார் எனில் மீதமுள்ள நாட்களை chalan மூலமாக செலுத்திவிட்டு அந்த நாட்களுக்கு உரிய பணப்பலனை retro arrear மூலமாக மட்டுமே பெற இயலும்.

Payroll run செய்வதற்கு முன்னரே ஒரு பணியாளருக்கு மாறுதல் கிடைக்கப் பெறுகிறார்கள் எனில் புதிய அலுவலகத்தில் சென்று அம் மாதத்திற்கு உண்டான முழு சம்பளத்தையும் புதிய அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் வெவ்வேறு கணக்கு தலைப்புகள் என்றாலும் சரியாக பிரிந்து வரும்.

நிறைய அலுவலகங்களில் உள்ள DDO தங்களது அலுவலகத்தில் பணியாற்றிய பணியாளர் மாறுதல் பெரும்பொழுது அவர் பணியாற்றிய பத்து நாட்களோ ,ஐந்து நாட்களோ, 15 நாட்களோ அவற்றுக்கு உரிய பணப்பலனை தங்கள் அலுவலகத்தில் வழங்கிவிட்டு தான் மாறுதல் LPC தருவோம் என்று சொல்வதும் செய்வதும் தவறான வழிமுறை.

 *IFHRMS பொறுத்தவரை மாத சம்பளத்தை பிரித்து வழங்கக்கூடாது.* 

Promotion entry கும் மேற்சொன்னது போன்றதுதான். ஒருவர் பதவி உயர்வு பெறுகிறார் எனில் எந்த தேதியில் இருந்து பதவி உயர்வு பெறுகிறார் அந்த தேதியில் இருந்து புதிய சம்பளம் சரியாக பிரிந்து வரும்.VJ

No comments:

Post a Comment

*About Commutation* / தொகுத்து பெறும் ஊதியம் பற்றி

*Commutation*  பற்றி: அஞ்சல் துறை ஊழியர் ஒருவர் ரிட்டையர் ஆகும்போது, அவருக்கு வழக்கமான பணப் பலன்களுடன்,  "கம்யூடேஷன்" என்ற பெயரில்...